உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை :

269

மங்கலநாண் முதலிய அழகுடையாளாம் வழி அவளைத் தூர்த்தையென் றுலகம் பழிக்குமாறு போலவும் அரசுரிமை யில்லாதானொருவன் அஃதுடையானே போல, மணிமுடி முதலிய அடையாளங்கொள்வுழி அவனரசனால் ஒறுக்கப் பட்டுச் சிறைக்களத்திடப்படுமாறு போலவும் சிவவழிபாடு இல்லாதானொருவன் அஃதுடையானே போலத் திருநீறு சிவமணியணிந்து பிறரை வஞ்சித்தன் மேற்கொண்டவழி அவன் தன் செயலையுணர்வாரெல்லாரானும், ஓ! ஓ! இவன் கொடியன், பாவி, வஞ்சகன், என்று இழித்துக் கூறப்படுதன் மேலும் மறுமையிற் சிவபெருமானால் ஒறுக்கப்படுதலும் உடையனாம் .சிவபெருமானைத் தெய்வமாகக் கொண்டு வழிபடும் நற்குலத்திற் பிறந்த சைவர்களே! எம்மரிய உடன்பிறப்பாளர்களே! நமக்கு இந்தமக்கள் யாக்கையும் அதனினுஞ் சிறந்த சைவகுலமும் முற்பிறவிகளில் ஈட்டிய பெருந்தவப்பயனால் வாய்ப்புப்பெற்றும் அவற்றாற் பெரும் பயனை நாம் ஒரு சிறிதும் எண்ணாமல் வாளாது வாணாளைக் கழித்தல் நன்றோ? நாம் வழிபடும் முழுமுதற்கட L வுள் சிவ பெருமான் ஒருவனே என்று துணிந்து அவனைப் போற்றும் நன்முறை அறியோமாயின், நாம் எவ்வளவுதான் திருநீறு சிவமணியணிந்தாலும் அவற்றால் நமக்குப் பயன் வருவ தன்று. சிவபெருமானைப் போற்றும் பொருட்டாகவே அவன்றிருவடையாளங்களான திருநீறும் சிவமணிமாலை யும் அணிகின்றோமென்று அறிந்து அவனை வழிபட்டான் மட்டும் நாம் வேண்டிய வாறெல்லாம் நமக்கு இம்மை மறுமைப்பயன்களை யருளி இறுதியில் அவன்றன் றிருவடிப் பேரின்பத்தையும் நமக்கு ஊட்டுவான்.

இனி இங்ஙனங் கூறுதல் பற்றி நாம் ஏனைச் சமயங் களையும் அச்சமயிகள் வழிபடுந் தெய்வங்களையு ம் இகழ்ந்துரைக்கின்றோமென்று நினையாதீர்கள். அங்ஙனம் நாம் ஒருகாலத்துஞ் செய்யோம். நாம் முதல் இதழில் வரைந்த “இவ்வுலகின்கட் பல்வேறுபடப் பரந்து கிடக்குஞ் சமயங்களெல்லாந் தம்மைப் பின்பற்றி யொழுகும் ஆன்மாக் களின் பக்குவ முறைமைக்கேற்பவும், அப்பக்குவ முறைமை யால் அவரறிவு விரிந்து செல்லுந் தன்மைக்கேற்பவுந் தாமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/302&oldid=1585914" இலிருந்து மீள்விக்கப்பட்டது