உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270

மறைமலையம் 19

ஒரு நெறிப்படாவாய்ப் பல நெறிப்பட அகன்று தாந்தாம் நுதலிய பொருளையே உண்மையெனத் துணிந்து ஆராய்ந்து அவை தம்மாலுறுதிகொண்டு உய்யுநெறி தேடுகின்றன; இங்ஙனம் ஒன்றினொன்று மறுதலைப்பட்ட இலக்கணங் களுடையவாயினும், ஒன்றினொன்று குறைந்த குணங்க ளுடையவாயினும், ஒன்றினொன் றுயர்ந்த குணங்களுடைய வாயினும் எல்லாச் சமயங்களும் மெய்ச்சமயங்களேயாய், எல்லாம் வீடுபேற்றின்கண் உய்க்கும் வழிகளுந் துறைகளு மேயாய், முழுமுதற் பெருங்கடவுளாகிய ளாகிய தந்தையை ஆன்மாக்களாகிய பசுங்குழவிகள் சென்று அணையுங்காறும் அறிவூண் தந்து வளர்க்குந் தாய்மார்களேயாய் விளங்குவன என்னும் மொழிக் கூறுகளே அதற்குச் சான்றாகும்.

மற்று நங்கருத்து யாதோவெனின்; - எல்லாச் சமயி களும் தாந்தாம் உண்மையெனக் கொண்டு போற்றுந் தெய்வங்களைத் தாந்தாம் பின்பற்றி யொழுகும் முறை பிறழாது தழுவக்கொண்டு உறுதிபெறல் வேண்டுமென்பதே நங்கருத்தாவதாம். இதனை விடுத்துச் சைவனொருவன் சிவ வழிபாடு நீங்கி வேறு சமயிகள் வழிபடுத் தெய்வங்களைப் பாராட்டிப் போற்றுதலும், அவ்வாறே அவ்வேறு சமயங்கள் தம் மதங்களுக் கிணங்காத பிற சமயத் தெய்வங்களைப் பாராட்டிப் போற்றுதலும் வரம்பழித்துச் செய்யு முறை யாதலால் அவை பெரிதும் இடர்ப்படுதற்கேதுவாய் முடியு மென் றொழிக. அற்றேல், சாக்கிய நாயனார் தாந்தழுவிய பௌத்த சமய வழி நின்று உறுதி பெறமாட்டாராய்ச் சிவவழிபாடு இயற்றியது வழுவாம்போலுமெனின், அற் றன்று, அவர் மேலைப் பிறவிகளிற் செய்து போந்த தவ முதிர்ச்சியால் தமக்கு மெய்யறிவு விளங்கி மிகு மேலான பக்குவமுடையராகப் பெறுதலால், அப்பக்குவ நிலைக் கேலாத பெளத்த சமயம் விடுத்து அதற்கேற்பதான சைவம் புகுந்து சிவனை வழிபட்டு உய்ந்தாராகலின் அது வழுவா மாறு யாண்டைய தென்றொழிக. அஃதாயின், அவர் தம் மேலைப் பிறப்புத் தவமுதிர்ச்சிக்கேற்பச் சைவ சமயத்திற் பிறந்து அவ்வாற்றாற் சிவனை வழிபடுதலன்றே மரபா மெனின் நன்று சொன்னாய். அவர் மேலைப் பிறப்புக்களில் அரிதாற்றிய தவவூழ் அவரைச் சைவ சமயத்திற் பிறப்பித்து

.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/303&oldid=1585915" இலிருந்து மீள்விக்கப்பட்டது