உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட

  • உரைமணிக்கோவை

271

ஆண்டு நின்றவாறே அவர்க்கு மிகு மேலான பக்குவத்தைப் பயப்பிக்கமாட்டாதாய்ப் பௌத்த சமயத்தின் கண்ணே அவரைப் பிறப்பித்து ஆண்டு நின்றவாறே இடையொரு காலத்து அம்மேலான பக்குவத்தைப் பயப்பிக்கும் பெற்றித் தாய் முற்கொண்டு அமைந்து கிடந்தது; பின் அக்கிடப் பின்படியே முடிந்ததாகலின் அது கடாவன்றென மறுக்க. இனிப் பல்வகைச் சமய முடிபொருள்களையும் நுண்ணிதாக ஆய்ந்து அதனால் மெய்யறிவு மிக விளங்கித் தாம் மெய் யெனக் கண்ட ஒரு சமயத்தைப் பின்பற்றி யொழுகுங் ப்பாடுடையார்க்குத் தஞ்சமய வரம்புகடந்து சேறல் குற்றமன்றாம். இனி இவ்வாறெல்லா மன்றித் தஞ்சமயப் பொருளுண்மையும் பிற சமயப் பொருளுண்மையும் அளந் தறிய மாட்டாதார் தஞ்சமய வரம்புகடந்து ஒழுகல் பெரியதொரு குற்றமாமென்றொழிக. இனிச் சைவசமயத்திற் பிறந்து சிவனை வழிபடும் நல்வினையுடைய நன்மக்கள் அந்நெறி கடைப்பிடியாது தம் மனம்போனவாறெல்லாம் புகுந்து தம் பெருமையிழத்தல் நன்றன்றாம். சைவ சமயிகள் சிவபெருமானை யன்றி ஏனைச் சமயத் தெய்வங்களை வழிபட ம் பெறமாட்டார். இதற்குத் திருவாதவூரடிகள் அருளிய, “கொள்ளேன் புரந்தரன் மாலயன் வாழ்வு குடிகெடினும்

டம்

நள்ளே னிததடி யாரொடல் லானர கம்புகினும் எள்ளேன் றிருவரு ளாலே யிருக்கப் பெறினிறைவா உள்ளேன் பிறதெய்வ முன்னையல்லா தெங்க ளுத்தமனே”

என்னுந் திருபாக்கே யுறுசான்றாமென்க.

இனிச் சிவபெருமானைப் போற்றுஞ் சைவர்களுக்குச் சிவ வழிபாடு ஒன்றே சாலுமாகலின், திருநீறு சிவமணி யணிதலும் பிறவும் அவர்க்கு இன்றியமையாதாமென் றுரைத்தவா றென்னையெனின்;

-

யனான

நன்று வினாயினாய், கொழுநனையுடையனான மனைக்கிழத்திக்கு மங்கலநாண் முதலிய அை யாளங்களும், அரசுரிமை யுடை ஓராண்மகனுக்கு மணிமுடி முதலிய அடை யாளங்களும் இன்றியமையாது வேண்டப்படுகின்றவாகலின், சிவனைப் போற்றுஞ் சைவர்களுக்கு அவையும் இன்றியமையாது

வேண்டற்பாலனவேயாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/304&oldid=1585916" இலிருந்து மீள்விக்கப்பட்டது