உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கு

272

புடை

மறைமலையம் -19

இ னி னி ஒரு தலைமகட்கும் ஓர் அரசற்கும் அவ்வவர்க் ரிய அன்பும் அதிகாரமுமே சாலுமாகவும், அவற்றின் வேறாக அடையாளங்கள் பிறகோடறான் ஏற்றுக்கென்று ஆராயலுறுவார்க்குத் தந்நிலையில் நின்றவழி உணர்வின்றிக் கிடந்த ஆன்மாக்கள் எழுவகைத் தோற்றத்துட்பட்ட உடல் களையும் அவ்வுடல்களில் இன்ப நுகர்ச்சிக்கு ஏதுவாய்க் கிடந்த மெய், வாய், கண், மூக்குச், செவி முதலிய புறக் கருவிகளையும், மனம் சித்தம் அறிவு ஆணவம் முதலிய அகக் கருவிகளையும் ஒருங்கு தலைக்கூடி உலகத்தோடு ஒருமைப் பாடுற்று அறிவு விரியப்பெறுபவென்பதும், இங்ஙனம் உடலோடு இயைபுறுதன் மாத்திரையானே குறிவழிச் செல்லும் அறிவு முகிழ்க்குமென்பதும் இனிது விளங்கும். குறியெனினும் அடையாளம் எனினும் ஒக்கும். இனி மானுட ரெல்லாரும் ஆண் பெண் எனப் பகுக்கப்படும் பகுப் யராதலும் அவ்வவர்க்குரிய குறிகுணச் சிறப்பு அடை யாளங்கள் பற்றியேயாம். அவ்வாண் பகுப்பாருள்ளும் இவனெமக்குத் தந்தை இவன் வன் உடன்பிறந்தான் இவன் புதல்வன் இவன் ஏதிலான் இவன் நண்பன் என வுணர்ச்சி வேறுபாடுறுதலும் அவ்வவர்க்குரிய சிறப்பு அடையாளங்கள் பற்றியேயாம். இனி அப்பெண் வகுப்பாருள்ளும் இவள் எமக்குத் தாய் இவள் உடன்பிறந்தாள் இவள் புதல்வி ஏதிலாள் இவள் கிழமையுடையாள் என்றற்றொடக்கத்தான் வேறு வேற்றிதலும் அவ்வவரிடைக் காணப்படும் சிறப்பு அடையாளங்கள் பற்றியேயாம். இனி ஆங்கில நூலாரும் ஒரு பொருளொடு வேறொன்றனை ஒப்பிட்டுக் காண்ட லானும், ஒன்றை ஒன்றின் வேறாகக் காண்டலானும் அறிவுமலர்ச்சியுண்டாம் என்று கூறுப, ஆகவே, உலகத்துட் டோன்றி அவ்வுலகியற் பொருளின்கண் அதுவதுவாய்ப் பதியும் அறிவுடைய ஆன்மாக்கள் அடையாளங்கள் பற்றிப் புணர்ச்சியுடையராகப் பெறுதல் இயற்கையாகவே வாரா நின்ற நிகழ்ச்சியாதலின், அது தன்னொடு முரணி வேறு வேறையுறல் பொருத்த மின்றாம்.

வள்

இனி இவ்வாறே ஒருவனைச் சைவனென்றும் ஒருவனை வைணவனென்றும் ஒருவனைப் பௌத்த னன்றும் ஒருவனைச் சமணனென்றும் அறியும் அறிவெல்லாம் அவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/305&oldid=1585917" இலிருந்து மீள்விக்கப்பட்டது