உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை

L

273

வவர்க்குரிய ஈகரவழிபாடு கருமவுறைப்பு நூலாராய்ச்சி முதலிய அடையாளங்கள் பற்றியே நிகழ்வதல்லது பிறி தன்றாம். இனி அவரவர்க்குரிய சமய அடையளங்களும் அவரவர்க்குயிர்போற் சிறந்தனவாய் அவர் செய்யும் இறைவழிபாட்டின்கண் நெஞ்சம் நெகிழ்த்திக் கடவுளன்புச் சுவைமிகுவித்து மேம்பாடுறுவனவாம். இப் பெற்றியவான அவ்வடையாளங்கள் அவ்வச்சமயத்தாரெல்லாரானுங் காண்டு போற்றப்படுவன வாதலின் சைவர்க்கு, திருநீறு சிவமணியணிதல் இன்றியமையா வடையாளச் சிறப்பின வென்பது தெற்றென விளங்கும்.

குறிக்

இனி, வடமொழியில் வேதாகம நூலாராய்ச்சியுந் தென்மொழியில் தேவார திருவாசக சிவஞானபோத த நூலாராய்ச்சியும் வேண்டற்பாலவென்ற லென்னை, திருநீறு சிவமணி புனைந்து திருவைந்தெழுந்தோதி யுண்மையன்பாற் சிவவழிபாடு இயற்றுதலொன்றே யமையுமெனின்; அற்றன்று, தாம் மட்டும் அங்ஙனம் வழிபட்டு உய்யுநெறி யொன்றே கடைப்பிடித்தல் தன்னைப்பற்றுத லென்னுங் குற்றமாதன் மேலும் பிற உயிர்த்தொகைகள் பிழைத்துப் போம் மெய்ந்நெறிகாட்டி வழிப்படுக்கும் அருளின்றாய் முடிதலானும், அருளின்றாகவே உயிர்கட்குரிய ஏனைக் குற்றங்களெல்லாமும் ஒருங்கு வந்து சேறலானும், அதனாற் பிறவி யறாமன் மேன்மேற் பெருகி வருதலானும் அவர்தாம் உண்மைச் சிவவழிபாடு செய்தாரல்லராவர்; இனித் தாமுய்யும் பொருட்டுச் சிவவழிபாடு இயற்றுதல் போலவே எல்லா உயிர்த்தொகைகளும் உய்கவென்னும் அருள்மிகுந்து அவர் தமக்கெல்லாம் அச்சிவ வழிபாட்டின் அருமை பெருமைகளை விரித்துரைத்து அறிவு கொளுத்தல் வேண்டு மாகலானும், அவ்வாறு அறிவு கொளுத்தற் பொருட்டுத் தம்முரையில் அவரைத் துணிபு ஒருப்படுத்தல் வேண்டு மாகலானும், அங்ஙனந் துணிபொருப்பாடு உறுவித்தற்கு வேதாகம நூலாராய்ச்சி இன்றியமையா நெறிப்பாடுடைய தாம் அல்லதூஉம், வேதாகம நூலுரைப் பொருள் செவ் விதின் ஆய்ந்து அவ்வாற்றான் முகிழ்க்கும் மெய்யறிவின்கன் இறையன்புச் சுவைத்தேன் ஓயாது சுரந்து இறவைன் றிருவடி யெண்ணத்தின்கண் மனவெழுச்சி மிகுக்கும் உரிமைப்பாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/306&oldid=1585918" இலிருந்து மீள்விக்கப்பட்டது