உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

மறைமலையம் 19

விளைதலானும் அவ்வாராய்ச்சி தமக்கும் பயப்படுபெரி துடைத்தாம். இருவழியானுஞ் சிறந்த வடநூல் தென்னூ லாராய்ச்சி சைவரெல்லாரானும் ஒழுங்காகச் செயல்படுதல் வேண்டும். இங்ஙனம் மூவேறு வகைப்படுத்து எடுத்துக் கொண்ட சிவவழிபாடும் திருநீறு சிவமணியணிதலும் திரு வைத்தெழுந்தோதலும் பொருணூலாராய்ச்சியும் சைவசமய நிலைக்குரியனவாம்.

ரு

இனி இக்காலத்துச் சைவர்களுட் சிலர் சிவனை வழி படுதலறியாராய்ச் ‘சிவனென்ன விண்டுவென்ன, எல்லாம் ஒன்றுதான்' என்றுரைத்து அன்பிலராய் நாட் கழிக்கின்றார். வைணவசமயிகள் திருமாலையே தாம் போற்றும் முழுமுதற் கடவுளென்று துணிந்து அவ்வாற்றான் வழிபடற்பாலார். சைவர் சிவனையே அங்ஙனத் துணிந்து வழிபடற்பாலார். இம்முறை திறம்பி இரண்டையு மொன்றெனக் கூறி அன்பிலாராய் ஒழுகி நாட்கழித்தல் எந்தச்சமயிக்கும் நன்றாகாது. ஈகரவழிபாட்டிற்கு ஒரு தலையான் வேண்டும் உள்ள நெகிழ்ச்சி எல்லாத் தெய்வங்களையுஞ் சமமாக காணும் பொது நோக்கத்தாள் வருவதன்று. மற்ற அஃது, ஒரு பொருளை ஏனையவற்றினின்றும் வேறுபிரித்துத தலைமைப் பாடுடையதெனக் காணுஞ் சிறப்பு நோக்கத்தால் வருவ தொன்றாம். இவ்வியல்பு பற்றியே உலகெங்கும் பல வேறு வகைப்பட்ட சமயங்களும் சமயத் தெய்வங்களும் பலப் பலவாய் விரிந்தன. அவ்வச்சமயத்தாருந் தத்தமக்கு உள்ள நெகிழ்ச்சி செல்லும் வகையான் தாந்தாம் விரும்புங் குணங் குறி முதலியன கொண்டு தத்தமக்கியைந்த வழியானெல்லாம் சிவபிரானைப் போற்றுதல் செய்து போதருகின்றார். இவ்வாறு விரிந்த சமயங்களையெல்லாம் ஒருமைப்படுத்த லாவது. அல்லதவற்றையெல்லாம் அழிவு செய்து மெய்ச் சமய மொன்றனை நிறுத்தலாவது யார்க்கும் இயல்வதன்று. அங்ஙனஞ் செய்தல் சிவபிரானுக்குத் திருவுள்ளமுமன்று. அவர்க்குத் திருவுள்ளமானால் ஒரு கணத்தில் அவ்வெல்லாச் சமயங்களும் ஒருமைப்பாடுறுமன்றோ? ஆகலான் எல்லாச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/307&oldid=1585919" இலிருந்து மீள்விக்கப்பட்டது