உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

276

மறைமலையம் 19

டெடுத்துக் கூறியவற்றால் இனிது விளங்கும்

னிச் சைவ நன்மக்களிற் சிலர் திரு நீறு சிவமணி திருவைந்தெழுத்து மறை முதலிய திருவடையாளங்களின்றி 'சிவவழிபாடு பெரிதுடையோமாகலான் எமக்கு அவ்வடை யாளங்கள் வேண்டா' என்றுரைக்கின்றார். அது பொருந்தா தென்பது மேலே விளக்கினாம், ஆண்டுக் காண்க.

வட

இனி வேறு சில சைவ நன்மக்கள் வேதாகம முதலிய வட நூலாராய்ச்சியும் தேவார திருவாசக சிவஞானபோதத் தென் நுாலாராய்ச்சியும் அரியவாயிருத்தலின் அவற்றின்கண் எமக்கு மனவெழுச்சி சென்றிலது என்று கூறுகின்றார். நூலாராய்ச்சி யில்லாதொழியினுந் தமிழ் நுாலாராய்ச்சி யேனுஞ் செய்துமென்றால் தமிழ் நுால்கள் செந்தமிழி லக்கணநெறி பிழையா நன்னடையில் எழுதப்பட்டிருத்த லால் அதன்கண்ணும் எமக்கு அறிவு சென்றிலது' என்றும் உரைக்கின்றார். 'நல்லதங்கைக் கதை’ ‘நளன் கதை' ‘இராமன் கதை' 'பாண்டவர் கதை' முதலியன போல் அத்தனை எளிதாக வருத்தமின்றி அச்செந்தமிழ் நுால்கள் விளங்கற் பாலனவா? சிவபெருமான் திருவடிப் பேரின்பவீடு, கத்தரிக் காய் புடோலங்காய் முதலிய தாவரவுணவு கொள்ளுத லானும், யாம் சைவரென்று தருக்கிக் கூறுதலானும் எய்தும் எளிமைத்தன்று. அல்லாமலும், உலகவாழ்க்கைப் பெருந் துன்பக்கடலில் தம்மறிவு தோய்ந்து பெருதுந் துயருழவா நிற்பவும் அதன்கண் எல்லாந் தமக்கு வருத்தம் இழையளவுந் தோன்றாது, இம்மை மறுமைப் பயன்றந்து உறுதிகூட்டும் அறிவு நுாலாராய்ச் சிக்கண் அவர்க்கு வருத்தந் தோன்றல் நல்வினை முகிழ்ப்பு கிழ்ப்பு இல்லாக் குறைபாடாவதன்றிப் பிறிதென்னை? விடியற்காலையில் உறக்கம் நீங்கி எழுந்து இரவில் துயில் கொள்ளுமளவும் மெய்வியர்வரும்பக் கொல், தச்சு, நெசவு, உழவு, பொறைச்சுமை, பகடு உய்த்தன் முதலான அருந்தொழில் பலவியற்றிப் பொருள் சிறிது ஈட்டுதற்கண் நம்மனோர்க்கு வருத்தந் தோன்றுதலில்லை;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/309&oldid=1585921" இலிருந்து மீள்விக்கப்பட்டது