உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* உரைமணிக்கோவை

277

ஒரு நாழிகைப் போதேனும் நன்மக்கள் குழுவிலிருந்து அறிவு நூலாராய்ச்சி செய்தற்கண் அவர்க்கு வருத்தம் மிகத் தோன்றா நிற்கும். பொய்யுரைத்தும், பொருளுடையாரைக் கண்டால் அவருவக்கும் வகை இச்சகம் பேசியும், நல்லோர் பெரியோரைப் புறம்பழித்தும், கலகவுரை நிதழ்த்தியும், விதண்டை பேசியும் வீணுரை கிளந்தும் நாளொழித்தற்கண் நம்மனோர்க்கு வருத்தந் தோன்றாது; அரை நாழிகைப் போதேனும் கடவுள் தொடர்பான நல்லுரையுரைத்து இன்பமுறுதற்கண் அவர்க்கு வருத்தமிகத் தோன்றா நிற்கும். நாட்டு வளங்கள் பல கண்டும் ம மலைக்காட்சிகள் பல கண்டும், கடற்காட்சி கண்டு கண்டு உலாப்போயும், கலைக் கழகங்கள், அறங்கூறு அவையங்கள், தொழிற்சாலைகள், வியச்சாலைகள், இன்பத் தோட்டங்கள், அறச்சோற்று மண்டபங்கள், யாவையு மலிந்த ஆவண வீதிகள் முதலான வருந்தித் திரிந்து கண்டும் நாட்கழித்தற்கண் நம்மனோர்க்கு வருத்தந் தோன்றாது; நல்லறிவுடையோரைக் கண்டு அவரோடு திருக்கோயில்

அளவளாவுதற்கண்ணுந்

க்

களுக்குச் சென்று சிவபிரான்றிருவுருவத்தைக் கண்ணார கண்டு களிப்பதன்கண்ணும் அவர்க்கு வருத்தம் மிகத் தோன்றா நிற்கும். புளுகுரை கேட்டும் புறம்பழிப்புரை கேட்டும் வம்புரைகேட்டும் வாதுரை கேட்டும் வாளாது நாட்தழித்தற்கண் நம்மனோர்க்கு மகிழ்ச்சிமிகத் தோன்றா நிற்கும்; பெரியோர்சொல் நீதியுரையும் நேர்மையுரையும் அறவுரையும் அறிவுரையுைம் அன்புரையுங் கேட்டற்கண் அவர்க்கு இகழ்ச்சிமிகத் தோன்றா நிற்கும். என்னே! என்னே! நம்மனோர் செயலிருந்தவாறு! ஆரிய நன்மக்களே! எம்மரிய உடன்பிறப்பாளர்களே! சைவசமய அன்பர்களே! இனி யேனும் இங்ஙனம் நாட்கழியாது அறிவு நுாலாராய்ச்சி செய்து சிவபிரானை உண்மையன்பான் வழிபடுதற்கு மடிகட்டி எழுங்கள். உங்கட்கு அறிவு நூலாராய்ச்சி சய்வது இயலாதாயின், யலாதாயின், அவ்வாராய்ச்சி முதிர்ந்த நல்லோரைக் கூட்டி அவருரைக்கும் நல்லுரைகளைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/310&oldid=1585922" இலிருந்து மீள்விக்கப்பட்டது