உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கோவை

9

காண்கின்றே மல்லேமோ? 'சான்பிரான்சிஸ்கோ' வென்னும் அமெரிக்காவிலுள்ள மாப்பெரு நகரமும், இத்தாலி தேசத்திலிருந்த 'மெசீனாப்' பட்டினமுஞ், சிறிது காலத்திற்கு முன் ஜப்பான் தேயத்தில் 'டோக்கியோ' பட்டினமும் நில அதிர்ச்சியாலும் எரிமலை நெருப்பாலும் அடியோடழிந்து எரிந்து கரிந்த காலத்தில் அங்கங்கிருந்த மக்களெல்லாரும் பட்ட பெருந்துன்பத்தை அறியாதார் யார்? மக்கள் அவை தம்மைத் தடுக்கவல்ல ஆற்றலுடையரா யிருந்தால்

அவ்வழிவுகள் நிகழாமல் தடை செய்திருக்கலாமன்றோ? இங்ஙனம் இந் நிலவுலகத்தின் ஒரோவொரு பகுதிகளில் நிகழும் அழிவு நிகழ்ச்சிகளையே அவை நிகழாமல் தடை செய்யவும், அழிந்து நீரிலமிழ்ந்திப் போன நிலப்பகுதிகளை மீண்டும் மேற்கொணர்ந்து நிலைவுறுத்தவுஞ், சிறிதும் ஆற்றலில்லாத நம் மக்கள் இந் நிலவுலகத்தைத் தாமாகவே ஆக்கவும் அழிக்கவும் நிலை நிறுத்தவும் வல்லர் ஆவர் என்று உரைப்பதினும் புல்லியவுரை வேறுண்டோ சொல்லுமின்! தமதுடம்பு பழுதுபட்ட விடத்து அதனையே ஆக்கிக் கொள்ளமாட்டாத நம்மனோர், எண்ணிறந்த பிறவுயிர் களுக்கு எண்ணிறந்த உடம்புகளைப் படைத்துக் கொடுக்க வல்லராதலும், அவ்வுடம்புகளோடு கூடியிருந்து இவ்வுலகத்து இன்பங்களை அவை நுகருமாறு பலவேறு பண்டங்களை யமைத்துவைக்க வல்லராதலும், அவ்வுடம்புகளும் அப்பண்டங் களும் இருத்தற்கு இம் மாப்பெரு நிலவுலகத்தைப் படைக்க வல்லராதலும் யாங்ஙனங் கூடும்? பாருங்கள்!

L

இந்நிலவுகத்தளவிலேயே ஆற்றல் மிகக் குறைந்தவராய் நிலையின்றி உயிர்வாழும் நம்மனோர், இந்நிலவுலகத்துக்கும் எட்டா நெடும் பெருந் தொலைவிலே இடைவெளியிற் சுழன்று செல்லும் பகலவன் மண்டிலந், திங்கள் மண்டிலஞ், செவ்வாய் மண்டிலம், புதன் மண்டிலம், வியாழன் மண்டிலம், வெள்ளி மண்டிலஞ், சனி மண்டிலம் முதலான வெவ்வேறு பேருகலங் களையும்,இவற்றிற்கும் நெடுந்தொலை லவிலே இவற்றினும் பல்லாயிர மடங்கு பெரியனவாய்ச் சுழன்று செல்லும் எண்ணிறந்த வான்மீன் மண்டிலங்களையும் எங்ஙனம் படைக்கவும் இயக்கவும் வல்லராவர்? இத்தனை கோடி யுலகங்களையுஞ் சிற்றுயிர்களாகிய நாம் படைக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/42&oldid=1585628" இலிருந்து மீள்விக்கப்பட்டது