உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருளிச்செய்த

அறிவுரைக்கோவை

11

தென்னையெனிற் கூறுதும்; கடவுள் உருவமாயே இருப்பனென்றாவது, அன்றி அருவமாயே ருப்பனென்றாவது சொல்லி, எல்லாம் வல்ல அவனது இறைமைக் குணத்தை ஒரு வரையறைப்படுத்தல் அவன்றன் வரம்பிலாற்றலுக்கு இழுக்காய் முடியுமாதலானும். அவன் உருவமாயே இருப்பனென் றுரைப்பின் உருவு உடைய உலகத்துப் பொருள்களில் ஒருவனாய் முடிவன் ஆகலானும், அருவமாயே நிற்பனென் றுரைப்பின் அருவமாகிய வான்வெளி முதலிய முதலிய பொருள்களில் ஒன்றாக வைத்து எண்ணப்படுவனாக லானும், புறத்தே இருப்பவனுக்கு அகத்தே செய்ய வேண்டு வனவும், அகத்தே இருப்பவனுக்குப் புறத்தே சய்யவேண்டு வனவும் அறிந்து செய்தல் இயலாமையானும், பொருள்கள் உயிர்களின் அகத்தும் புறத்தும் வல்லவனுக்கே அவ்விரண்டிடத்தும் அவைகட்கு ஆவன அறிந்து சய்ய வல்லவனாகலானும் எல்லாம் வல்ல இறைவன் அருவாயும் உருவாயும் அகத்தும் புறத்தும் வரையறை யின்றி நிறைந்து நிற்பனென்பதே உண்மை முடிபாமென்று ஓர்ந்து கொள்ளல் வேண்டும். இவ்வுண்மை தேற்றுதற்கே ஆசிரியர் மெய்கண்ட தேவ நாயனார்,

“இல்லா முலைப்பாலுங் கண்ணீரும் ஏந்திழையால் நல்லாய் உளவாமால் நீர்நிழல்போல் - இல்லா அருவாகி நின்றனை யாரறிவார் தானே உருவாகித் தோன்றானேல் உற்று”

என்றும், அவர் தம் மாணக்கர் அருணந்திசிவனார்,

“உலகினிற் பதார்த்த மெல்லாம் உருவமோ டருவ மாகி நிலவிடும் ஒன்றொன் றாகா நின்றஅந் நிலையே போல அலகிலா அறிவன் றானும் அருவமே என்னில் ஆய்ந்து

குலவிய பதார்த்தத் தொன்றாய்க் கூடுவன் குறித்தி டாயே’

"அருவமோ உருவா ரூப மானதோ அன்றி நின்ற

இருக்க

உருவமோ உரைக்குங் கர்த்தா வடிவெனக் குணர்த்திங் கென்னின்

அருவமும் உருவா ரூப மானது மன்றி நின்ற

உருவமும் மூன்றுஞ் சொன்ன ஒருவனுக் குள்ள வாமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/44&oldid=1585630" இலிருந்து மீள்விக்கப்பட்டது