உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

மறைமலையம் 19

என்றும், அருளிச் செய்தனர்கள். வடமொழியில் ஈசா

வாசியோநிடதமும்,

66

அவனைக் கண் கண்டு எல்லாம் நடுங்குகின்றன, அவனெதற்கும் நடுங்குவதில்லை, அவன் எல்லாவற்றிற்குந்

அவன் எல்லாவற்றிற்கும்

தாலைவிலிருக்கின்றான், அருகிலுமிருக்கின்றான், அவன் எல்லாவற்றின் உள்ளுமிருக் கினறான், அவன் எல்லாவற்றின் வெளியிலு மிருக்கின்றான் என்று இவ்வுண்மையினையே நன்கெடுத்து மொழிவ தாயிற்று.

6

இனி, இங்ஙனம் பொருள்களின் உள்ளும் புறம்பும் உயிர்களின் உள்ளும் புறம்பும் நிறைந்திருப்பானான இறைவ னியல்பு உணர்த்துவான் புகுந்து, அவன் இயற்கையுண்மையும் இயற்கை யறிவும் இயற்கையின்பமும் வாய்ந்தானாகி யிருப்பனென அடிகள் மொழிந்திட்டார். இறைவனியல்பு இப்பெற்றிய தாமெனவே, இறைவனது உதவியை அவாய் நிற்கும் பொருள்களும் உயிர்களும் அங்ஙனம் இயற்கை யிலேயே உண்மையும் அறிவும் இன்பமும் வாயாவாயிருக்கு மென்பதும் அறிவித்தாராயிற்று. இனி, இம் மூன்று தன்மை களின் இலக்கணங்களும், பொருள்களும் உயிர்களும் இவை தம்மை இயற்கையிலே யுடையவாகாமையும், இறைவ னொருவனே இவை தம்மை இயற்கையே யுடையனாதலும், இறைவனைச் சார்ந்தே உயிர்கள் அவை மூன்றும் நிலையாக எய்தப் பெறுதலும் முறையே விளக்கிச் செல்வாம்.

முதற்கண் ‘உண்மை' என்பது ‘என்றும் ஒருபடித் தாய் நிற்கும் மாறாநிலையே' யாகும். நமதறிவுக்குப் புலனாகும் பொருள்களுள் ஒன்றாயினும் மாறாநிலையினதாய் ஒரு படித்தாய் நிற்கக் காண்கின்றோமா? இல்லை, இல்லை. நாம் உயிர்வாழ்தற்கு இடமாயுள்ள இம் மண்ணுலகு எத்தன்மை யதாயிருக்கின்றது? ஒரு காலத்து மேடாயிருந்தது பள்ளமா கின்றது, பள்ளமாயிருந்தது மேடாகின்றது; பண்டைக் காலத்திற் சிறந்த நாகரிக முடையதாய் விளங்கிய குமரிநாடு இப்போது கடலுள் அமிழ்ந்திக் கிடக்கின்றது; கடலுள் மறைந்துகிடந்த எத்தனையோ நிலப்பகுதிகள் இப்போது கடல் நீருக்குமேற் பல தீவுகளாய்க் கிளம்பி யிருக்கின்றன;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/45&oldid=1585631" இலிருந்து மீள்விக்கப்பட்டது