உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரசு

அறிவுரைக்கோவை

13

எத்தனையோ ஆயிரமாண்டுகளுக்குமுன் நாகரிகத்திற் சிறந்த மக்களால் எகுபதி நாட்டில் அமைக்கப்பட்ட பெரிய பெரிய நகரங்களும் அந்நகரங்களிலமைக்கப்பட்ட பெரிய பெரிய அரண்மனைகளும் பெரிய பெரிய கோயில்களும், அங்ஙனமே சாலடி நாட்டில் ‘ஊர்’ என்னுந் தலைநகரில் எடுப்பிக்கப்பட்ட மிகப் பெரிய அரண்மனைகளும் மிகப் பெரிய கோயில்களும், அங்ஙனமே நமது இவ்விந்திய நாட்டின் வடமேற்பகுதியிற் குடியேறிய பண்டைத் தமிழ் மக்களால் தலைநகராக அமைக்கப்பட்ட ‘அரப்பா' என்னும் இடமும் அதன்கண் இருந்த அரண்மனைகளும் கோயில்களும் மண்மூடுண்டு, இப்போது மேல்நாட்டு நன்மக்களால் நிலத்தினின்றும் அகழ்ந்தெடுத்துக் காட்டப்படுகின்றன. முன்னொருகால் மேல்நாடு முழுமையுந் தம் செங்கோல் நீழல் இனிது வைக செலுத்திய உரோம நகரின் மிக வியக்கத்தக்க மாடமாளிகைகள் அழிந்து பாழாய்க் கிடத்தலை இப்போதுந் திரள்திரளான மக்கள் சென்று பார்த்து வருகின்றனர். இங்ஙனமே இத் தமிழ் நாட்டகத்தும் பழங்காலத்திருந்த தமிழ் வேந்தர் அமைத்த அரண்மனைகளுந் திருக்கோயில்களும் இடிந்து பாழாய்க் கிடத்தல் திருவாரூர், கங்கைகொண்ட சோளேச்சுரம், மகாபலிபுரம், செஞ்சி, வேலூர் முதலிய இடங்களில் இன்றும் எல்லாருஞ் சென்று பார்த்து வருகின்றனர். வைகை முதலிய யாறுகளும் முற்காலத்து ஓடிய வழிமாறி ஓடுகின்றன. மிகப்பழைய நாளில் வடநாட்டில் ஓடிய சரசுவதி என்னும் யாறு இப்போது இல்லாமலே போயிற்று. முன்னில்லாத பல யாறுகள் பின்னர்ப் புதியவாய்த் தோன்றி ஓடாநிற்கின்றன. நாம் உறையும் இந்நிலமண்டிலமே வரவரக் குளிர்ந்து வ ரு கின்ற தென்றும், இன்னும் பல்லாயிர நூற்றாண்டுகள் கழிந்தபின் மக்களும் பிறவுயிர்களும் உயிர்வாழ்தற்கே இசையாதாய் சையாதாய் இது மாறுமென்றும் நில நூல் வல்லார்கள் பெரிதாராய்ந்து உரைக்கின்றனர்.

ர்

இப்போது நமக்கு இரவில் ஒளியைத் தரும் நிலா மண்டிலமானது பன்னூறாயிர ஆண்டுகளுக்குமுன் உயிர் வாழ்க்கைக்கு இடமாயிருந்து, பின்னர் வரவரக் குளிர்ந்து உயிர் வாழ்தற்கு ஏலாத இயல்பினதாய் மாறியிருக்கின்றதென வான் நூலாசிரியர்கள் நுவல்கின்றனர். இன்னும்

நம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/46&oldid=1585632" இலிருந்து மீள்விக்கப்பட்டது