உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

மறைமலையம் 19

கண்களுக்கு ஆலம்வித்துப் போலவும் மின்மினி யொளி போலவுந் தோன்றா நின்ற எத்தனையோ பெரிய பெரிய உலகங்களில் பற்பல முன்னரே அழிந்துபட்டனவாயும், வேறுபல புதிது தோன்றினவாயும், மற்றும் பல அழிந் தொழியும் நிலைமையில் நி இருப்பனவாயும் பற்பல

மாறுதல்கட்கு உட்பட்டனவாய்ச் செல்லுகின்றன வென்னும் உண்மை வான் நூல் ஆராய்ச்சியாற் புலனாய்க் கொண்டிருக் கின்றது. நாம் நுகரும் பண்டங்கள் நாம் புழங்கும் ஏனங்கள் முதலாயின வெல்லாம் நாளேற நாளேறத் தமது கட்டுச் சிதைந்துந் தேய்ந்தும் அழிந்துபோதல் போலவும், நமக்கு நெருங்கிய தொடர்புடைய நம்முடம்பும் நாளேற நாளேற நரை திரை மூப்புப் பிணிகள் உடையவாகிக் கட்டுத் தளர்ந்து நம்மை விட்டு அழிதல்போலவும், இவ்வுலகமும் இவ் வுலகத்தைச் சூழ்ந்த எண்ணிறந்த உலகங்களும் அவற்றின்கண் உள்ள அளவிலாப் பண்டங்களும் ஒருகாற் றோன்றித் சிலகால் இருந்து பிறிதொருகாற் கட்டுக்குலைந்து காணாமற்போய்விடுகின்றன. ஆகவே, மிகச் சிறியது முதல் மிகப் பெரியதீறான எல்லாவகையான உயிரில்லாப் பொருள் களும் ஒரே நிலையாக இருக்க மாட்ட ருக்க மாட்டாதனவாய்ச் சிதைந் தொழிந்து போதலால் அவைகளை ஒரே நிலையிலுள்ள உண்மைப் பொருள்களாகக் கூறுதல் இயலாது.

இனி, உயிருடைய பொருள்களின் நிலை சிறிது ஆராயற் பாற்று. உயிருடையவைகள் எல்லாம் அறிவுடையன வாய் இருந்தும், அவற்றின் அறிவு என்றும் ஒரே தன்மையதாகச், சுருங்குதல் விரிதலின்றி என்றும் ஒரே அளவினதாக, அகவிருளால் இடையிடையே பற்றப்படாத னவாக விளங்கக் கண்ட துண்டோ? நாம் சிறுமகவாயிருந்த ஞான்று நமதறிவு எந்நிலை யிலிருந்ததென்பது நமக்கே விளங்கவில்லை. ஆனாலும், எத்தனையோ சிறுமகவுகளை நாம் நம் கண்ணெதிரே கண்டு, அவற்றின் இயல்பை உற்றுநோக்குதல் காண்டு, அவற்றின் அவற்றின் அறிவு ஏதோ ஒரு பேரிருளாற் கவரப்பட்டிருக்கின்ற தென்றுந், தாய்தந்தையார் உடன் பிறந்தார் நேயர் ஆசிரியர் முதலான பிற அறிவுடை யுயிர்களின் சேர்க்கையிலிருந்து அம்மகவுகள் சிறிது சிறிதாக அவ்விருள் நீங்கி அறிவு விளங்கப்பெற்று வருகின்றன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/47&oldid=1585633" இலிருந்து மீள்விக்கப்பட்டது