உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

  • மறைமலையம் 19

பாராமல் வாங்கித், தாம் வாங்கிய தித்திப்புக்கு மாறான புளிப்புடையவாய் இருத்தலைக் கண்டு ஏமாந்து போகின்றனர். மருத்துவரில் எத்தனை பேர் நோயாளிகளின் நோயின் தன்மையை அறியாமல் மாறான மருந்துகளைக் கொடுத்து அவர் கொண்ட நோயை மிகுத்து அவரையுங் கொல்லு கின்றனர்! கணக்கரில் எத்தனை பேர் தவறாகக் கணக்குச் செய்து தாமும் பிழைபட்டுத், தாம் சார்ந்த செல்வரையுங் கடுத்து விடுகின்றனர்! சமையற்றொழில் செய்வாரில் எத்தனை பேர் காலமும் இடமும் உணவெடுப்பார் உடல் நிலையும் ஆய்ந்து பாராமல் உணவு சமைத்துக் கொடுத்து, அதனை யுண்பார்க்குப் பல கொடுநோய்களை யெல்லாம் வருவித்துவிடுகின்றனர்! நூல் எழுதுவாரில் எத்தனைபேர் காலப்போக்கும் மக்கள் முன்னேற்றமுங் கருதிப் பாராமற் பயனற்ற பொருள்களை எழுதி மக்களறிவு வளர்ச்சியைப் பாழ்படுத்துகின்றனர்! அவருள் எத்தனைபேர் தாம் வழங்கும் மொழியைத் திருத்தமாகப் பயிலாமற் சொற்குற்றஞ் சொற்றொடர்க் குற்றம் பொதுள எழுதியும் அயன்மொழிச் சொற்களை அடுத்தடுத்துக் கலந்தும் அதன் தூய வழக்கை மாயவைக்கின்றனர்! இன்னும் ன்னும் இங்ஙனமே நம் மக்களிற் பெரும்பாலார்-அவர் கற்றவராயினுங் கல்லாதவரா யினுந், தங் கண்ணெதிரே காண்பனவுஞ் செய்வனவுமெல்லாம் உண்மைக்கு மாறாகப் பிழைபடச் செய்து தாந் துன்புறுவ தொடு பிறரையுந் துன்புறச் செய்கின்றனர்! இவ்வாறு இவர்கள் நிகழ்கால நிகழ்ச்சிகளிலேயும் மெய்யொடு திறம்பிப் பொய்படு மறிவினாராயிருக்கக் காண்டலின், இவர்களது அறிவை உண்மை நிலையின தென்றுரைக்க மெய்யறிவு வாய்ந்தார் ஒருப்படுவரோ சொன்மின்கள்!

னி, இங்ஙனங் கடந்தகால நிகழ்ச்சிகளிலும் நிகழ்கால நிகழ்ச்சிகளிலும் அடுத்தடுத்துப் பிழைபடும் அறிவுடைய இவர்கள், புலனுணர்வு, மனனுணர்வுக்கு எட்டாத வருங்கால நிகழ்ச்சிகளை முன்னறிந்து நடத்தல் யாங்ஙனங் கைகூடும்? நாம் நெடுங்காலம் உயிர்வாழ்ந்து இவ்வுலக இன்பங்களைத் துய்ப்போமென்று எண்ணிக் கொண்ட எத்தனைபேர் ஏழை எளியவர்கள் வயிற்றை யொடுக்கிச் சேர்த்த பொருளை அவர் கண்ணீர் சிந்தக் கைப்பற்றிக்கொண்டு வந்த அந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/49&oldid=1585635" இலிருந்து மீள்விக்கப்பட்டது