உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கோவை

17

நேரத்திலேயே சடுதியில் உயிர் துறந்து பிணமாய்க் கிடக்கக் கண் தில்லையா? தமக்குமேல் வலிமையுடையவர்களில்லை யென்று இறுமாந்து வலியற்றவர்களைத் வலியற்றவர்களைத் துன்புறுத்தி வந்தவர்கள் தாம் தம்மினும் வலியாரால் வெட்டப்பட்டு வீழ்ந்து கிடக்கவில்லையா? எத்தனை செல்வர்கள் எத்தனை அரசர்கள் எத்தனை மறவர்கள் தமது நிலையாமையை உணர்ந்து பாராமையால், நாளைக்கு நமது நிலைமை யெப்படியாமோ என்று ஐயுறவு கொள்ளாமையாற் பிறர்க்குத் தீங்கிழைத்துப், பின்னர்த் தாம் இருந்த இடமுந் தெரியாமல் இறந்து போகின்றனர்! வருங்கால வியல்பை உணர்ந்து பார்க்கமாட்டாத நம் மக்களறிவும் அறிவெனப்படுமா? தன் உடம்பினுள்ளுந் தன்னைச் சுற்றிலும் நிகழப்போவன வற்றையே யறியமாட்டாதான் ஒருவன், தான் ஒருவனே பல்லாண்டு நீடுவாழ்வன்-ஏனையோரெல்லாம் நீடுவாழார் எனநினைந்து பிறர்க்கு முன் தானே மாய்ந்து ஏமாற்றம் அடைவனாயிற், சிற்றறிவுடைய இம் மகனறிவு உண்மையை யுள்ளபடி யுணர வல்ல உண்மையுடைய தாமோ? மக்களின் இச்சிற்றறிவுப் பெற்றி மெய்கண்ட தேவநாயனார்,

தேற்றுதற்கன்றோ

“அறிந்தும் அறிவதே யாயும் அறியா

தறிந்ததையும் விட்டங் கடங்கி - அறிந்த

தெதுவறிவும் அன்றாகும மெய்கண்டான் ஒன்றின்

அதுவதுதான் என்னும் அகம்

என்று அருளிச் செய்தார்.

பிற்காலத்தில் தாயுமான அடிகளும்

"இனியே தெமக்குன் அருள்வருமோ வெனக்கருதி ஏங்குதென் நெஞ்சம் ஐயோ

இன்றைக் கிருந்தாரை நாளைக்கிருப்பர் என்று

எண்ணவோ திடம் இல்லையே”.

ஆசிரியர்

என்று அருளிச் செய்தமை காண்மின்கள்! இங்ஙன மெல்லாஞ் சல்கால நிகழ்கால வருங்கால நிலைகளை உணரும் உண்மையறிவு வாயாமையால், மக்களும் மற்றையுயிர்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/50&oldid=1585636" இலிருந்து மீள்விக்கப்பட்டது