உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

மறைமலையம் 19

இயற்கையுண்மை நிலையுடைய வாகாமை தெற்றென விளங்கா நிற்கும்.

து

L

துகாறும் ஆராய்ந்தவாற்றால் உயிரில் பொருள்களும் உயிருள் பொருள்களும் இயற்கையிலேயே உண்மைநிலை யுடையவல்லாமை நன்கு பெறப்படுதலால், உயிர்கள் தாமுந் தம்மை ஓர் அறிவுடைப் பொருளென்று தமதுண்மை உணர் தற்குந், தமக்கு உடம்பும் உலகமும் உலகத்துப் பல்பொருள் களுமாகத் திரிபெய்திப் பயன்படும் மாயையென்று ஒரு பொருள் உண்டு என்று அதன் உண்மையினை அவைகள் அறிதற்குங், கடவுள் என்று ஒரு முழுமுதற்பொருள் என்றும் மாறாத இயற்கை யுண்மை யுடையதாய், அவை இரண்டனையுந் தொடர்புபடுத்துதற்கு வேண்டுமென்பது இன்றியமையாது பெறப்படும். என்னை? தன்னிலே மாறா உண்மைநிலை யில்லா ஒருவன் பிறர்க்கு ஏதொரு நன்மையுஞ் சய்யமாட்டாமை நமது உலக வாழ்க்கையில் அடுத்தடுத்து நிகழக் காண்டும் அன்றோ? தன் மனக்கினிய நண்பன் பட்டகடனை நாளை வந்து தீர்த்து அவனைச் சிறைபுகாமற் காப்பேன் என்று உறுதிசொல்லிப் போன ஒரு செல்வன் தான் சொன்ன மொழியுந் தன் நினைவும் மாறிவிடுவனாயின், அவன் அவற்கு அவ்வுதவியைச் செய்யா தொழிதல் போலவும், வெப்புநோயால் வருந்து மொருவனுக்கு அந்நோய் தீர்க்க வந்த மருத்துவன் ஒருவன் நாளை விழுமியதொரு மருந்து காணர்ந் தூட்டி அதனைத் அதனைத் தீர்ப்பேனெனச் சால்லிப் போய் மறுநாளில் அங்ஙனமே வந்து செய்யா தொழியின் அவன் அவற்குச் சிறிதும் பயன்படாமை போலவும், ஒரு கொடியானால் துன்புறுத்தப் பட்டு நடுநிலை மன்றத்தில் முறையிட்டான் ஒருவனுக்கு முறை செய்யப் புகுந்த ஒரு நடுவன் தன் கடமையினின்றும் வழீஇத், துன்புறுத்திய கொடியன்பாற் கைக்கூலி வாங்கிக்கொண்டு முறைசெய்யாது மாறுவானாயின் அவன் தன்பால் முறை வேண்டினானுக்கு முறை செய்யாது குறை செய்தல் போலவும், றைவனும் மாறுந்தகையனாயின், அவன் உயிர்களுக் ஏதொரு நன்மையும் சய்யமாட்ட ா நிலையினனாய் டுவன். மற்று, அவன் எண்ணிறந்த வுயிர்களுக்கும் அவ்வ வற்றின் அறிவு நிலைக்கேற்ப எண்ணிறந்த உடம்புகளைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/51&oldid=1585637" இலிருந்து மீள்விக்கப்பட்டது