உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கோவை

19

கொடுத்து அவற்றின் அறிவை மேன்மேல் விளங்கச் செய்து வருதலையும் அவற்றின் அறிவு விளக்கத்திற்கு இன்றியமை யாத வெயில்மண்டில நிலாமண்டில இயக்கங்களைச் சிறிதும் மாறாமல் நிகழச் செய்து வருதலையும், அவற்றின் உயிர் வாழ்க்கைக்கு ன்றியமையாத புற்பூண்டு மரஞ்செடி கொடிகளை மாறாமல் விளைவித்து அவை காய் கனி கிழங்கு வித்துக் கீரை முதலான பயன்களைத் தொடர்பாகத் தருமாறு உதவி வருதலையும், மழை பெய்யுங் காலத்து மழைபெய்யவும் அதற்குக் கருவியான குளிர்ங்காற்று வேண்டுங் காலத்துக் குளிர்ங்காற்று வீசவும் மழைக்கு முதலான நீராவி எழுதற்கு வெயில் மிகுங்காலத்து வெயில் மிகுந்து எறிப்பவும் மாறாமற் புரிந்து வருதலையும், இவ்வாற்றால் எல்லா வுயிர்களும் உணவு பெற்று அவற்றை யுட்கொண்டபின் அகத்திருந்து அவ்வுணவைச் சாறுஞ் சக்கையுமாகப் பிரித்துச் சாற்றைச் செந்நீராக மாற்றி உடம்பெங்கும் ஓடச் செய்துஞ் சக்கையை உடம்பினின்று உடனுக்குடன் கழியச் செய்தும் நம் பெருமான் ஒரு நொடிப்பொழுதும் மடிந்திராது பேருதவி யாற்றி வருதலையும், அவன் அமைத்த மாறா நிகழ்ச்சிகளுக்கு மாறுபடாமல் நமது வாழ்க்கையினை நாம் செலுத்தத் தெரியாமல் அறியாமையினாலும் இறுமாப்பினாலுந் தீய இன்ப வேட்கையினாலும் நமதுடம்பை நாமே சிதைத்து விட்ட விடத்து அதனை யொழித்து நமக்கு வேறு புதிய உடம்புகளைக் கொடுத்து நம்மை வேறு வேறு புதிய பிறவிகளில் உய்த்து வருதலையும் நாம் நன்காராய்ந்து ஆழ்ந்து நினையுங்கால், எல்லாம்வல்ல நம் ஆண்டவன் ஒருவனே எக்காலத்தும் எவ்விடத்தும் மாறா உண்மை நிலையுடையனா க்கின்றன னென்பதூஉம், அவன் ஒருவனே உயிர்களிடத்தும் அவை எத்துணை இழிந்தனவாயினும் எத்துணை உயர்ந்தன வாயினும், அவற்றின்பாலெல்லாம் மாறாத அன்பினனாய் மாறா அருளினாய் இருக்கின்றன னென்பதூஉம் உள்ளங்கை நெல்லிக்கனிபோற் றெள்ளத் தெளிய விளங்குகின்றன வல்லவோ? ஆகையால், இயற்கை யுண்மை வாய்ந்தவன் இறைவன் ஒருவனே ஒருவனே யல்லாமல் மற்றைய அல்லவென்று மேலைத் திருப்பாட்டில் அடிகளார் அறிவுறுத்தமை சாலப் பொருத்த முடைத்தாதல் கண்டு கொள்ளப்படும்.

-

எல்லா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/52&oldid=1585638" இலிருந்து மீள்விக்கப்பட்டது