உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

மறைமலையம் 19

மையால்,

இனி, இவ் வுலகத்தின்கண் உள்ள சிற்றுயிர்களெல்லாம் ரே தன்மைத்தாக மாறாது விளங்கும் அறிவுவாய்ந்தவை அல்லவென்பது வன்பது முன்னரே காட்டப் பட்ட அவ்வுயிர் களெல்லாவற்றிற்கும் வேண்டுவனவெல்லாம் அறிந்து உதவி செய்தற்கு, என்றும் ஒரு பெற்றித்தாய் வயங்கா நின்ற பேரறிவு வாய்ந்த முதல்வன் ஒருவன் இன்றியமையாது வேண்டப்படுவ னென்பது முடிக்கப்படும். எத்தனையோ உயிர்கள் புதிது தோன்றுவனவாயும், எத்தனையோ உயிர்கள் இறந்து படுவனவாயும், எத்தனையோ உயிர்கள் வேறு பிறவிகளிற் செல்வனவாயும் உயிர்கள் தோற்றக்கேடுகள் இடையறாது எங்கும் நிகழக் காண்டலின் அவ்வவ்வுயிர் களின் அகத்தும் புறத்துமிருந்து அவ்வவற்றின் தோற்றக் கேடுகளை யறிந்து அவ்வவற்றிற்குப் பிறரெவராலுஞ் செய்யமுடியாத பேருதவியைச் செய்யும் பெருமான் அறிவு, எத்துணைப் பெரியதாய் எத்துணை விழுமிய விளக்கத்ததாய் எத்துணை அருளிரக்கம் வாய்ந்ததாய் எத்துணைச் சிறந்த மாறா நிலையினதாய் மிளிர்வதாகல் வேண்டும்! பசித்து உணவு வேண்டி வந்தார்க்கு உணவு கொடுக்கும் ஒருவன், ஓரிடத்தில் ஒருகாலத்துள்ளார் சிலர்க்கு மட்டுமே உணவு காடுக்க வல்லனாவன்; தெற்கே குமரியிற் பசித்த பலர்க்கும், இடையே சென்னை வேங்கடம் முதலான ஊர்களிற் பசித்தார் பலர்க்கும் அவன் ஒருவனே ஒரே காலத்தில் உணவளிக்க மாட்டுவனோ? மாட்டானன்றே? ஒன்றை விட்டு ஒன்று மிக அகன்றிருக்கும் அவ்வவ்வூர் களிலுள்ள வறிஞர்க் கெல்லாம் அங்ஙனம் அவன் ஒரே காலத்தில் உணவளிக்க வேண்டின், ஆ ங்காங்கு உணவமைப்பார் பற்பலரை நிறுவிப் பெரும் பொருள் செலவிட்டு அவர் வாயிலாக அங்ஙனஞ் சய்யலாமேயன்றித் தான் ஒருவனாகவே யிருந்து அங்ஙனஞ் செய்யமாட்டுவான் அல்லன்.

இங்ஙனமே நோய் கொண்டு வருந்துவார்க்கு நோய் தீர்க்கும் மருத்துவனும், ஒருகாலத்து ஓரிடத்துள்ள ஒரு சிலர்க்கு மட்டுமே நோய்தீர்க்க மாட்டுவானன்றி, ஒன்றி னொன்று அகன்றிருக்கும் பற்பல ஊர்களிலுள்ள பற்பலர்க்கும் ஒரேகாலத்தில் நோய்நீக்கமாட்டு வானல்லன்; அன்றி அவன் அங்ஙனஞ் செய்ய வேண்டிற் பெரும் பொருள் செலவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/53&oldid=1585639" இலிருந்து மீள்விக்கப்பட்டது