உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கோவை

21

செய்து மருத்துவர் பற்பலரை ஆங்காங்கு ஏவியே நோய் கொண்டார் பல்லாயிரவர்க்கும் மருந்தூட்டி நோய்தீர்க்கற் பாலன். மற்று, எல்லாம் வல்ல கடவுளோ ஓரிடத்தின்றி ஓரூரிலன்றி ஒருலகத் தன்றிப், பல்வேறிடங் களிலும் பல்வேறு ஊர்களிலும் பல்வேறு உலகங்களிலும் நிறைந்து ஆற்று மணலிலும் அளவிடப்படாதனவாய் உள்ள உயிர்த் தொகைகளில் எத்தனைகோடி உயிர்களை ஒரே б காலத்திற் காத்து வருகின்றான், எத்தனை கோடி யுயிர்களை ஒரே காலத்தில் தோற்றுவிக்கின்றான், எத்தனைகோடி யுயிர்களை ஒ ரே காலத்திற் காத்து வருகின்றான், எத்தனை கோடி யுயிர்களை ரேகாலத்தில் ஒரு பிறவியினின்று விடுவித்து வேறுபல பிறவிகளில் உய்த்து வருகின்றான், எத்தனைகோடி யுயிர்களை ஒரே காலத்தில் தன் திருவடிப் பேரின்பத்திற் படிவித்து வருகின்றான்! இங்ஙனமாக எல்லா இடங்களிலும் எல்லாக் காலங்களிலுந் தான் ஒருவனாகவே யிருந்து, எல்லா உயிர்களின் இயல்புகளையும் அறிந்து, அவ்வவற்றிற்கேற்ற உதவிகளைத் தான் ஒருவனாகவே செய்துவரும் இறைவன்றன் அறிவாற்றல் எவ்வளவு சிறந்ததாய், எவ்வளவு பேரள வினதாய் இருக்கவேண்டு மென்பதைச் சிறிது எண்ணிப் பாருங்கள்! இத்துணைச் சிறந்த அவனறிவு, நம்மனோர்க் குள்ள அறிவுபோல் ஆணவ வல்லிருளில் மறைந்து இருந்து, பின் அதனினின்றும் விடுபட்டு விளங்குவதாய் இருக்கக் கூடுமோ என்பதையும் எண்ணிப் பாருங்கள்! அவனறிவு சிறிது மறைந்திருந்தால், இவ்வுலகமெங்கே, இவ்வுலகத்துள்ள பண்டங்களெங்கே, பல்வகை யுயிர்களெங்கே, ஞாயிறு திங்களெங்கே, எல்லாம் வெறும் பாழாய்வெட்ட வெளியா யி ருக்குமல்லவோ? ஆதலால், எல்லாம் வல்ல இறைவனறிவு, நமதறிவுபோல் ஆணவ வல்லிருளிற் சிறிதும் மறையாதாய், என்றும் விளங்கினபடியாயே யிருக்கும் என்பது சிறிதும் ஐயமின்றித் தெளியற்பால தாகும். இது பற்றியே, அடிகளார் அவன் இயற்கை யறிவினனாயே யிருப்பன் என்று மேலைத் திருப்பாட்டில் அருளிச் செய்தாரென்றுணர்ந்து கொள்ளல் வேண்டும்.

இனி,இறைவன் இயற்கையுண்மையினனாயும் இயற்கை மட்டுமே இருப்பனென்று உரைப்பின்,

யறிவினனாயும் மட்டுமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/54&oldid=1585640" இலிருந்து மீள்விக்கப்பட்டது