உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

மறைமலையம் 19

இன்புறுத்தப்படுதலும் இல்லானாய், எஞ்ஞான்றும் இன்ப வுருவினனாயே னனாயே நிற்கும் பெற்றியனாகலின், அவற்குரிய அச் சிறப்பிலக்கணம் பிறிதெதற்கும் உரியதாதல் செல்லா தென்று உணர்தல் வேண்டும். இறைவன் இங்ஙனம் இன்ப வுருவின னாயே நிற்குந் தனிப் பேருண்மை அறிவுறுத்துதற் கன்றோ மாணிக்கவாசகப் பெருமான்,

“சோதியாய்த் தோன்றும் உருவமே அருவாம் ஒருவனே சொல்லுதற் கரிய

ஆதியே நடுவே அந்தமே வந்தம் அறுக்கும் ஆனந்தமா கடலே”

என்றும்,

“ஓரின்ப வெள்ளத்து உருக்கொண்டு தொண்டரை யுள்ளங் கொண்டார்’'

என்றும், இங்ஙனமே

‘மகாதேவ மாலை’யில்,

இராமலிங்க

அடிகளார்

“தற்போத வொழிவினிடை நிறைந்து பொங்கித்

ததும்பிவழிந் தோங்கியெலாந் தானேயாகிச்

சிற்போதத் தகம்புறமுங் கோத்துநின்ற

சிவானந்தப் பெருக்கேமெய்ச் செல்வத்தேவே".

என்றும் அருளிச் செய்திருத்தலும் நினைவிற்பதிக்கற்பாற்று. அற்றேல், இறைவனோடொத்த அறிவினராக ஓதப்படுஞ் சதாசிவர் முதலாயினர் மாட்டும் இயற்கையின்பம் உளதாகல் வேண்டாமா லெனின்; அற்றன்று, சதாசிவர் முதலியோர்க்குந் தலைமை செலுத்துதலால் உண்டாகுஞ் செருக்காகிய 'அதிகார மலம்' ஒன்றுண்டென நூல்கள் ஓதுதலின், அவரது அறிவுஞ் சிறிது குறைபாடுடையதேயாகும்; அஃதுடைய தாகவே, அவ்வறிவைப் பற்றி நிகழும் இன்பமுங் குறைபாடுடைய தாகவேயிருக்கும். அதனால், அவர்க்குள்ள அக்குறைபாடு நீங்குவதற்கும், அவர் எல்லாம் வல்ல முழுமுதற் சிவத்தின் உதவியையே அவாய் நிற்றலின், அவரும் அச்சிவத்தின் திருவருட் பேரின்பத்தைத் தலைக்கூடி, அதன்கட் படிந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/57&oldid=1585643" இலிருந்து மீள்விக்கப்பட்டது