உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கோவை

25

யராவ

பின்னரே நிறைந்த அறிவும் நிறைந்த இன்பமும் உடை ரென்பது முடிக்கப்படும். அங்ஙனம் முடிக்கப்படவே, முப்பத்தாறு பருப்பொருள் நுண்பொருட் படிகளுக்கும், அவ்வப் படிகளில் வைகுவாராய் மும்மல இருமல ஒருமலப் பற்றுடைய மூவகை யாருயிர்த் தொகுதிகளின் நிலைகளுக்கும் அப்பாற்பட்ட இயல்பின தாயுள்ள சிவம் ஒன்றே இயற்கை யுண்மையும் இயற்கை யறிவும் இயற்கை யின்பமும் உடையதாய், எல்லாவற்றையுந் தன் அருள்வெளியிலடக்கி, அவற்றின் மேலும் எல்லை யில்லாத விரிவானதாய் விளங்குமென்பதும் முடிக்கப்படும்.

அஃதொக்குங், காரியப்படாத மாயையின் பெரும் பகுதி இயற்கையுண்மை யுடையதாதல் முன்னரே பெறப்பட்டமை யின், அஃது அவ்வாற்றல் இறைவனியல்போடு ஒத்ததாவான் செல்லுமா லெனின்; மாயையின் ஒரு பகுதியியற்கை யுண்மை யுடையதாயினும் அதன் மற்றொரு பகுதி இயற்கையுண்மை வாயாதாய்க் காரியப்பட்டு மாறக் காண்டலினாலும், அங்ஙனந் தன்னிலே இருவேறு வகைப்பட்டு நிற்கும் அப் பொருள் ஒரே நிலையினை தென்றற்கு இடம் பெறாமை யினாலும், இறைவன் அதுபோல் அங்ஙனந் தன்னிலே இருவேறு வகைப்பட்டு ஒருவகையிற் காரியமாய் மாறுதலும் பிறிதொரு வகையிற் காரியமாய் மாறாமல் நிற்றலும் ஆகிய வேறுபாடு உடையனல்லானகலானும் மாயை றைவனே டொத்த உண்மை நிலையினதாதல் செல்லாதென்று

கடைப்பிடித்தல் வேண்டும்.

அஃதொக்குமன்றாயினுஞ், சைவசித்தாந்த நூல்களும்

இறைவனுக்கு அருவம் உருவம் என்னும்

ருவகை நிலைகளும் உண்டென்றோதுதலின், அவனும் மாயைபோற் காரியப்படுதலுடையனென்பது பெறப்பட்டு, அங்ஙனம் ஓதுமது மாயாவாதக் கொள்கையாய் முடியுமாம் பிற வனின்; அற்றன்று, இறைவன் மாசற்ற தூய அறிவுப் பொருளே யல்லாமல், அறிவில்லா மாயை போல்வான் அல்லன். அறிவில் பொருள்மட்டுமே ஒருநிலையிலிருந்து பிறிதொரு நிலைக்குத் திரிக்கப்படும்; மற்று அறிவுடைப் பொருளோ அங்ஙனந் திரிக்கப்படுதல் எஞ்ஞான்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/58&oldid=1585644" இலிருந்து மீள்விக்கப்பட்டது