உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

மறைமலையம் 19

கொள்ளல் வேண்டும். இறைவனுருவம் இப்பெற்றியதாதல் கண்டே அருணந்தி சிவனார்.

“மாயைதான் மலத்தைப்பற்றி வருவதோர் வடிவமாகும் ஆயஆணவம் அகன்ற அறிவொடு தொழிலையார்க்கும் நாயகன் எல்லாஞானத் தொழின் முதல் நண்ணலாலே காயமோ மாயையன்று காண்பது சத்திதன்னால்”.

என்றும்,

66

""

‘சத்திதன் வடிவே தென்னில் தடையிலா ஞானமாகும் என்றும் அருளிச் செய்வாராயினர். ஆகவே, இறைவனது பேரறிவு நிலையை யுணர்வாராகிய மக்களின் சிற்றறிவுக் கண்ணுக்கே அவன் அருவமாகப் புலனாகாது நிற்பன்; மற்று, அவன் அருளைச் சார்ந்து, அதனால் மாசுதீர்ந்து தூயரான அன்பரின் தூய அறிவுக்கு, அவன்றன் தூய அறிவுருவநிலை முற்றும் புலனானவாறேயாய் விளங்கா நிற்குமென்று உணர்ந்து கொள்ளல் வேண்டும்.

இனி, “மெய்ப்பொருளாஞ் சிவம் ஒன்றே” என்றது, மேற்காட்டியவாற்றான் மாறுந் தகையவான பொருள்களும் உயிர்களும், மாறாநிலையினதான சிவத்தை நோக்க மெய்யல்லா தனவாதல் பெறப்படுதலாற், சிவம் ஒன்றை மெய்ப்பொருளாதல் தெருட்டியவாறு. அற்றேற், சிவமல்லாத பொருள்களெல்லாம் பொய்யென முடிந்து ஏகான் மவாதமாம் பிறவெனின்; அங்ஙனமன்று, நிலை மாறாததே மெய்யென்றும், நிலைமாறுவதே பொய்யென்றும் உலக வழக்கானுஞ் சான்றோர் நூல் வழக்கானும் நன்கறியக் கிடத்தலின், என்றுமில்லாத வெறும் பாழையும் பொய்யை யும் ஒன்றென்றல் அடாது. "நில்லாதவற்றை நிலையினவென் றுணரும், புல்லறிவு" என்னுந் திருக்குறளும் இக் கருத்தே பற்றி யெழுந்ததாகும் அல்லதூஉம், இல்லாத வெறும் பாழைப் பற்றிப் பேசுவாருங் கேட்பாரும் யாண்டு மிலராகலானும், உயிர்களும் பொருள்களுமிருந்தே முப்பொருளாராய்ச்சி நிகழ வேண்டுமாகலானும், நிலைமாறுவன உள்பொருள்களே யல்லால் இல்பொருள்களாதல் செல்லாமையானும், இதன் கண் ஏகான்மவாதங் கூறுவாருரை ஒருசிறிதும் பொருந் தாதென விடுக்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/61&oldid=1585647" இலிருந்து மீள்விக்கப்பட்டது