உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவம்’

அறிவுரைக்கோவை என்னுஞ்சொற்

சம்மை

29

யென்னும்

பண்படியாகப் பிறந்து சிவந்த நிறத்தையும், இன்பத்தையும் உணர்த்துஞ் சிறந்த தமிழ்ச் சொல்லாகலானும், இறைவன்றன் அறிவுருச் சிவந்த நிறத்தினதாயும் இன்ப நிலையினதாயும் இருக்கும் உண்மையினை நமக்கு நினைவுறுத்திக், காணவுங் கருதவும் படாத முதல்வன்றன் அறிவுருவினை நாம் காணவுங் கருதவும் எளிதாம்படி வைத்து நமக்கு நினைவொருமை யினைப் பயப்பிப்பதில் இச்சொற்போலக் கடவுளுக்குரிய வேறெச்செல்லும் உதவி புரிவ தின்மையானும், சிவம் என்னும் இச் சொல்லையே கடவுளுக்குச் சிறந்த பெயராக வைத்துப் பண்டைக் காலந் தொட்டு இன்றுகாறும் ஆன்றோர்கள் வழங்கி வருதலானும், ஈண்டு அடிகளாரும் அச் சொல்லையே சிறந்ததாக எடுத்து அருளிச் செய்வாராயினர். அடிகளார் பிறாண்டுஞ் "சிவம் பிரமமுடியே" என்று ஓதியதூ உங் கருத்திற் பதிக்கற்பாற்று.

னிச், சிவம் ஒன்றே மெய்ப்பொருள் என்று ஆழ்ந் தாராய்ந்து கண்ட தொல்லாசிரியர்களும், அவர்வழி பிழையாதுவந்த அடிகளாருந் தாங்கண்ட அவ் வரும்பே ருண்மையினை, மக்களெல்லாரு முணர்ந்து உய்தல் வேண்டு மென்றெழுந்த பேரிரக்கத்தால் அடுத்தடுத்தெடுத் துணர்த்தி வரவும், அதனைக் கடைப்பிடியாது, பிறந்து பெருந் துன்பங்களிற் பட்டுழன்று இறந்து ஒழிந்த அரசர்களையும் இழிந்த மக்களையு மெல்லாந் தெய்வங்களாக வழிபட்டுப் பிறவியைப் பாழ்படுத்தி இருள் நிரயத்திற்குஞ் செல்லுங் கீழ்மக்களை அது செய்தலாகாதென்று, மேலைச் செய்யுளின் பின்னிரண்டடிகளில் தடுத்தருளினார்.

இனி, மேலைச்செய்யுளின் இறுதிப்பகுதியில், இறைவன் எல்லாவுயிர்களின் அகத்தே நெஞ்சத்தாமரையின் அறிவு வெளியிலும் புறத்தே எண்ணிறந்த வுலகங்கட் கெல்லாங் களைகண்ணாம் அருள்வெளியிலும் பொதுநின்று இன்ப ஆடல்புரியும் இயல்பினை, ஞானாசிரியன் மெய்யுரை வழிநின்று மூச்சை யடக்கி, மூலத்திலுள்ள குண்டலியை யெழுப்பி அதனோடு உணர்வினை ஒருங்கியைத்துக் கொண்டு, நெஞ்சத் தாமரையின் அகத்தே சென்று கண்டு இன்புறும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/62&oldid=1585648" இலிருந்து மீள்விக்கப்பட்டது