உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

2. தமிழின் ஒலி எழுத்துகள்

சொற்கள் எல்லாம் ஒன்றும் பலவுமாகிய ஒலிகளால் ஆக்கப் படுவனவாம். ஓர் ஒலி தனித்துநின் றாயினும் வேறு ஒலிகளோடு புணர்ந்து நின்றாயினும் ஒரு பொருளை அறிவுறுத்துங்கால் அஃது ஒரு சொல்லாக, ங்ஙனந் தோன்றும் பல சொற்களினது தொகுதியே தமிழ் ஆரியம் ஆங்கிலம் முதலான தனித்தனி மொழிகளாய் நடைபெறு கின்றன. உலகத்தின்கண் உள்ள எல்லா மொழிகளுக்கும் முதல் ஒலிகளே யாயின், அவ்வொலிகளும் எல்லா மாந்த ரிடத்தும் இயல்பாற்றோன்றி ஒரு தன்மைப்பட நிற்குமாயின் அவற்றால் ஆக்கப்படும் எல்லா மொழிகளும் ஒரே இயல் பினவாகக் காணப்படுதல் வேண்டுமேயெனின்; எல்லா மாந்தர்க்கும் எல்லா ஒலிகளும் ஒரு முறையாகவே தோன்றுமாயின் அவற்றால் அமைந்த மொழிகளெல்லாம் ஒரு தன்மையாகவே தான் நிற்கும். மற்று அவ்வொலிகள் ஒவ்வொரு நிலத்தின்கண் உறையும் மக்கட்கு ஒவ்வொரு வகையாய்த் தோன்றுதலின், அவற்றிற்கு ஏற்ப அவ்வொலி களால் ஆக்கப்படும் மொழிகளும் பலதிறப்பட்டு நடக்கின்றன.

ஒவ்

ம்

இனி, ஒவ்வொரு நிலத்தின்கண்

உறைவோர்க்கு

வாரு வகையான ஒலிகள் தோன்றுதல் ஏன் என்று ஆராய்ந்து பார்ப்பின், ஒரு நிலங் குளிர் மிகுந்ததாய் இருக்க மற்றொரு நிலம் வெப்பம் மிக்க தாயும் பிறிதொன்று சூடுங் குளிர்ச்சியும் ஒன்றினொன்று மிகாமல் ஒத்து நிற்கப் பெறுவதாயும் வேறுபட, இங்ஙனம் வேறுபட்ட அவ்வந் நிலத்தின் காலநிலைக்கு இசைந்த பயிர் பச்சைகளும் அவற்றில் உண்டாம் உணவுப் பொருள்களும் பல்வேறு வகைப்பட, இவற்றை உண்டு உயிர் வாழும் அவ்வந்நிலத்தின் மக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/64&oldid=1585650" இலிருந்து மீள்விக்கப்பட்டது