உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

மறைமலையம் 19

உடம்பு நிலையும் அவர் பேசும் வகையும் அவர் மேற்கொள்ளும் உடையும் வழக்கவொழுக்கங்களும் பலவேறு தன்மையுை யனவாய்க் காணப்படும். இந்நிலவுலகத்திற்கு நடுவே செல்லும் நடுவரையானது, நமது செந்தமிழ் நாட்டிற்குத் தெற்கெல்லை யாய் விளங்கும் குமரி முனைக்குந் தெற்கே அறுநூறு மைலுக்கு அப்பால் கிழக்கு மேற்கில் நேர் செல்கின்றது. அவ்வரைக்கு நேரே உச்சியிற் பகலவன் செல்லுங்கால் அவ்வரை நெடுகிலும் பக்கங்களிலும் இருக்கும் நாடுகள் டங்கள் அனைத்தும் ஆற்ற முடியாத வெப்பம் மிகுந்தன வாய் ஆகின்றன. இதனாலேதான், இந்த வரைநெடுக ருக்கும் சிங்கப்பூர், சுமத்திரா, நடு ஆப்பிரிக்கா, தென் அமெரிக்காவின் வடபகுதி முதலான இடங்களெல்லாம் கொடிய வெப்பம் வாய்ந்தனவாய் இருக்கின்றன. இந்த நடுவரைக்கு இன்னுந் தெற்கே செல்லச் செல்ல ஞாயிற்றின் வெப்பங் குறைந்து குறைந்து குளிர் மிகுதிப்படுகின்றது. இந்த நடுவரைக்குந் தெற்கே நெடுந்தொலைவில் இருத்தலினா லேயே ஆத்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா முதலான நாடுகள் கடுங்குளிர் மிகுந்தனவாய்யும் செல்லச் செல்லக் குளிர் மிகுதியாகவே காணப்படும். நமது செந்தமிழ் நாடு இந்த நடுவரைக்கு அருகிலிராமலும் அகன்று நெடுந்தொலைவில் இல்லாமலும் இசைவான இடத்திலும் அமைந்திருத்தலால் இதன் கண்ணே குளிரும் வெப்பமும் ஒன்றினொன்று மிகாமல் மக்கள் வாழ்க்கைக்கு இனிதாய்ப் பொருந்தியிருக்கின்றன. மற்று இச்செந்தமிழ் நாட்டை விட்டு வடக்கே செல்லக் செல்லக் குளிர் மிகுந்தே வரும். காசியிலும், அதற்கு வடக்கே இமயமலையிலும், அதற்கும் வடக்கே சீனதேயத்திலும் அதற்கும் வடக்கே மேரு மலையிலும், அதற்கும் வடக்கே சைபீரியாவிலுஞ் செல்லச் செல்லத் தாங்க முடியாத குளிரும் பனிக்கட்டியும் காணப்படுகின்றன. இந்நிலவுலகத்தின் வடக்கு முனையில் உள்ள கடலில் நீருங்கூடப் பனிக்கட்டியாக இறுகியிருக்கின்றது. அங்குள்ள

டங்களெல்லாம் பனிக்கட்டியினால் மூடப்பட்டிருக்கின்றன; அங்கே ஆறு திங்கள் இருளாய் இருளாய் இருக்கும், ஆறு திங்கள் பகலாய் இருக்கும். அதனால், அங்கே புற்பூண்டுகளும் இல்லை. அங்குள்ள மக்களெல்லாம் கடல் மீனையே உணவாகத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/65&oldid=1585651" இலிருந்து மீள்விக்கப்பட்டது