உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

மறைமலையம் 19

நிலங்களிலிருப்பவர் ஒலிகள் எடுத்த ஓசைக்கும் படுத்த ஓசைக்கும் நடுவாய் அமைகின்றன. இவ்வுண்மை அவ்வந் நிலத்தின்கண் உள்ள பறவைகள் செய்யும் ஒலிகளின் வேற்றுமையாலும் நன்கு அறியப்படும். பனி மிகுந்த இங்கிலாந்து நாட்டில் உள்ள காக்கைகள் 'கிரா, கிரா' என்று கரையும்; சூடுங் குளிரும் ஒத்த நிலைமையில் அமைந்த இத்தமிழ்நாட்டுக் காக்கைகளோ 'கா, கா' என்று கரைகின்றன; ஆனதனால் ஆங்கில மொழியிற் காக்கைக்குக் 'குரோ’ என்னும் பெயரும், நமது செந்தமிழ் மொழியில் 'காக்கை’, காகம்' என்னும் பெயர்களும் வழங்கி வருகின்றன. பனி நாடுகளிலிருப்பவர் மிடறு கரகரப்பாய் இருத்தல் இயற்கை யாதலால், அவர்கட்கு இயல்பாக எழும் ஒலிகளிற் பெரும் பாலும் ரகரவோசை கலந்தே நிற்கும். குழந்தைகட்கு இயல் பாற் பிறக்கும் ‘மா பா' என்னும் முதல் ஒலிகளே இதற்குச் சான்றாம். பிள்ளைகள் வாயைத் திறக்குங்கால் அகரவொலி இயல்பாற் பிறக்கப் பிறகு திறந்த வாயின் இதழ்களை ஒன்று பொருத்துங்கால் மகரவொலி பிறக்க, இவ்வாறு வாயைத் திறந்து மூடுதலால் ‘அம்மா’ என்னுஞ் சொற்றோன்றித் தாய்க்குப் பெயராய் வழங்குதல் காண்கின்றோம்; இங்ஙனமே, திறந்த வாயின் இதழ்களைச் சிறிது அழுந்தப் பொருத்து தலால் ‘அப்பா' என்னுஞ் சொல் பிறந்து தந்தைக்குப் பெயராய் வழங்கப்படுகின்றது. இந் நிலவுகத்தின்கண் உயிர் வாழும் எல்லா மக்களின் பிள்ளைகளும் அவர் ஒன்றோடொன்று வேறுபட்ட எத்தனை வகையான மொழிகளைப் பேசுவாரா யினும், முதலில் இயல்பாகத் தோற்றுவிக்குஞ் சொற்கள் அம்மா அப்பா என்பனவேயாம். இவ்விரண்டு சொற்களும் முதற்பிறக்கும் ஒலிகளாய் இருத்தலின், மொழிகளிலும் தாய்தந்தையரைக் குறிக்குஞ் சொற்களாகவே அமைவன வாயின.

வை

எல்லா

உலகமெங்கும் ஒரேபடியாகத் தோன்றும் இவ்வியற்கை மொழிகளுங்கூட அவ்வந்நிலத்தின் றன்மையாற் சிறுசிறு வேறுபாட்டுடனுங் காணப்படா நிற்கின்றன.பனிமிகுந்த நாட்டில் உறைபவரான ஆங்கில மக்கள் மொழியில் ‘மதர்’ பாதர் என்னுஞ் சொற்கள் தாய்தந்தையரைக் குறிப்பனவாய் இருக்கின்றன. பிள்ளைகட்கு முதலிற் பிறக்கும் ம என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/67&oldid=1585653" இலிருந்து மீள்விக்கப்பட்டது