உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கோவை

.

ரகர

35

ஒலியே மதர் எனவும், அதன்பின் பிறக்கும் ப என்னும் ஒலியே பாதர் எனவும் திரிபெய்துகின்றன. இச்சொற்களில் ரகர வொலி விரவி நிற்றல் உற்றுணரற்பாலதாம். முன்னரே கூறியபடி, குளிராற் கரகரப்பான மிடற்றின் கண் ரகர வொலி தோன்றல் இயல்பாதலின், மகார்க்கு இயற்கையே தோன்றிய இச்சொற்களிலும் அவ் ரகர வொலி விரவ, அவை மதர் பாதர் என ரகர வீற்றால் முடிந்தன. நமது தமிழ் நாடாகிய இவ்விந்தியாவிற் புகுந்த ஆரியரும் வடக்கே மேருமலையைச் வ சூழ்ந்த பனி நாடுகளில் உறைந்தவர்களாதலின், அவரது ஆரிய மொழியின்கண் தாய் தந்தையரைக் குறிக்குஞ் சொற்களும் ‘மாத்ரு' ‘பித்ரு' என என ரகரவொலி விரவி நிற்கின்றன. இங்ஙனமே பனி நாடுகளில் வழங்கும் எல்லா ழிகளிலும் தாய்தந்தையரைக் குறிக்கும் இப்பொதுச் சாற்களில் ரகரவொலி விரவி நிற்றல் காணப்படும்.* வ்வாறு அவ்வந்நிலத்தின் பலவகை வேறுபாடுகள் உண்டாதலால், அவர்களிடத்து இயல்பாற் பிறக்கும் ஒலிகளும் பல திறப் படுகின்றன. இப்பலவகை யொலிகளால் ஆக்கப்படும் சொற்களும், அச்சொற்களால் ஆக்கப்படும் மொழிகளும் பல திறப்படுகின்றன. அவ்வந்நிலங்களின் வேறுபாடுகள் அளவுக்கு அடங்காதனவாய் இருத்தலால் அவ்வேறுபாடுகளுக்கு உட்பட்ட மக்களிடத்துத் தோன்றும் அளவுக்கு அடங்காதனவா யிருக்கின்றன. ஆகவே, உலகத்தில் வழங்கும் ஒலிகள் அத்துணையும் அளந்தறிந்து முடிவு கட்டல் எவர்க்கும் ஏலாமையின், அவற்றை அறியப்புகுதலும் ‘எமது மொழி எல்லா ஒலிவேறுபாடுகளும் முற்றும் உடையது' எனச் சருக்கிக் கூறுதலும் பயன் படாதனவாம். ஆகவே, எல்லா லிவேறுபாடுகளையும் அளந்தறியப் புகுதலை விடுத்து, எல்லா ஒலிகளும் பிறத்தற்கு முதலாய் உள்ள சில ஒலி எழுத்துக்கள் எவையென்று அறிந்து கொள்ளுதலே பயன் மிகுதியும் உடையதாகும். ஒரே மொழியினுள்ளும் ஓர் எழுத்தாதல் ஒரு சொல்லாதல் பலராற் பலவேறு வகையாகச் சொல்லப்படுதலை உற்று நோக்கிக் காண்பார்க்கு யாங்கூறும் இவ்வுண்மை நன்கு விளங்காநிற்கும். இனி இயல்பாற் பிறக்கும் ஒலி எழுத்துக்கள் இவை யென்பது அடைவே காட்டுதும்.

லி வேறுபாடுகளும்

லி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/68&oldid=1585654" இலிருந்து மீள்விக்கப்பட்டது