உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

மறைமலையம் 19

எல்லாமொழிகளிலும்

.

அகரம்: மூடியிருந்த வாய் திறக்கையில் இயல்பாக எழும் ஒலி அ என்பதே யாகும். சிறுமகார் முதல் ஆண்டில் அ முதிர்ந்தோர் ஈறாக எத்திறத்தவரும் தமது வாயைத் திறந்த அளவானே இவ்வெழுத்தோசை தோன்றாநிற்றலின் இஃது முதல் எழுத்தாய் நிற்கின்றது. துபற்றியே தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் “அகர முதல எழுத்தெல்லாம்' என்றார். அகரம் அல்லாத மற்ற எல்லா எழுத்துக்களையும் வாயைத் திறந்தே சொல்ல வேண்டி யிருத்தலினாலும், வாயைத் திறந்தவுடனே அகரவொலி முதற்றோன்றிப் பின்னர் ஏனையெழுத்துக்கள் பிறத்தற்கு இட ஞ்செய்து நிற்றலினாலும் அவ்வகரம் எல்லா ஒலிகட்கும் முன்னதாதலோடு அவற்றின்கட் கலந்தும் நிற்கின்றது. இவ் அகரம் புலப்பட்ட ஓசையும் புலப்படாத ஓசையும் உடைத்து. புலப்பட்ட ஓசை அது தானேயாய் ஒலிக்கும்போது உண்டாவது. புலப்படாத ஓசை வாயானது திறந்தபடியாய் நிற்கும்போது உளதாவது ஏனை உயிர்மெய்கள் ஒலித்தற்கு இடந்தந்து நிற்குங்கால் தன் ஒலி காட்டாது பிற ஒலிகளை இயங்கச் செய்து அவற்றினுள் விரவி நிற்கும் என்க. உலகு உயிர்கட்குத் தலைவனான இறைவன தியல்பை உணர்த்து தற்கும் இவ்அகர வாலியினையே எடுத்துக்காட்டுப. முதல்வனியல்பை உண்மையான் உணருங்கால் அவன் உலகுயிர்களின் வேறாய், அவற்றிற்கு முதல்வனாய் நிற்ப னென்பது புலப்படும். இனி, உலகுயிர்கள் அவனையின்றி இயங்காமையால், அவன் அவைதன்னுள் இயங்குதற்கு இடந்தந்து தான் அவற்றினுள்ளுமாய்ப் புலப்படாது நிற்பன் என்க. இதனாற் பொருளினியல்பும் அவ்வப்பொருளைப் புலப்படுக்கும் ஓசையினியல்பும் தம்முள் ஒப்புமையுடைய வாதல் காண்க. இவ்வொப்புமை ஏனையுயிர் மெய்கட்கும் உண்டு...அது பின்னர்க் காட்டுவாம்,

ஆகாரம்: அகரவொலியின் நீட்டமே ஆகாரமாம். அகரம் சிறிது புலப்பட்டும் புலப்படாதும் நிற்கும்; அதன் நீட்டமாகிய ஆகாரவொலி என்றும் புலப்பட்டபடியாகவே நிற்கும். சிறிது தோன்றியும் தோன்றாமலும் உள்ள இறைவனியல்பை அகரவொலி காட்டா நிற்ப, உலகுயிர்களை இயக்கி அவ்வியக்கத்தால் தன்னிலையைப் புலப்படுத்தி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/69&oldid=1585655" இலிருந்து மீள்விக்கப்பட்டது