உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கோவை

ஐந்தொழிலியற்றும் முதல்வனியல்பை ஆகார

குறிப்பிடா நிற்குமென்க.

37

வாலி

இகரம்: உலகுயிர்க ளெல்லாம் நிறைந்த இறைவன் போல வாயிடமெல்லாம் நிரம்பிய ஓசையாய் ஒலிக்கும் அகர ஆகாரங்கள் போலாது, இ இ என் என்னும் ஒலி வாயின் ஓர் ர் உறுப்பாகிய நாவின்றொழிலாற் பிறத்தலின், இது சிறிது இயக்கமுடைய சிற்றறிவுயிர்களை உணர்த்தும் ஓசையாம். இதன் நீட்டமாகிய ஈகாரவொலி பிறவிவட்டத்திற் செல்லும் சிற்றுயிர்களை உணர்த்துவதாகும்.

உகரம்: இதழ்களைக் குவித்துக் கூறும் முயற்சியாற் சிறிது இயங்கும் உகரவொலி, பிறவி ஓய்ந்துபோக இறைவன் றிருவடியை நோக்கி மெல்லச் செல்லும் தூய உயிர்க்கு அடையாளமாகும். உகரத்தின் நீட்டமாகிய ஊகாரவொலி முதல்வனடியை நோக்கி முறுகிச்செல்லும் தூய உயிரை உணர்த்தா நிற்கும்.

இவ்வாறு தோன்றிய அ இ உ என்னும் மூன்றொலிகளில் அகரம் முதற்றோன்றுதலின் அது தோற்றத்தினையும் இகரம் தோன்றிய ஒலி சிறிதுநேரம் நிற்கப் பெறுவதாகலின் அது நிலையினையும், உகரம் அவ்வொலி முடியுமிடமா யிருத்தலின் இறுதியினையும் உணர்த்துகின்றன. உணர்த்தவே, பொருளுலகத்தின் நிகழும் தோற்றம் நிலை இறுதி என்னும் முத்தொழில்களும் ஒலியுலகமாகிய அகர இகர உகரங்களில் அறியக் கிடக்குமென்பது பெற்றாம்.

இனி, இம் மூன்றெழுத்துக்களும் பிறத்தற்கு இடமாகிய திறந்த வாயின் வடிவினை உற்று நோக்கினால் அது வட்டவடிவினதாய் நிற்றல் புலனாம். அவ்வாயினுள் அமைந்த நா நீண்டிருக்குமாறும் அங்ஙனமே புலனாம். வட்ட வடிவினது விந்துவென்றும் வரிவடிவினது நாத மென்றும் சொல்லப்படுமென்பதனைச் சிவஞானபோத ஆராய்ச்சியில் நன்கு விளக்கியிருக்கின்றோம். விந்து வென்னும் புள்ளி வடிவின் இயக்கமே வரிவடிவாய் நீண்டு ஓசையினைத் தோற்றுவித்தலின், இவ்விந்து நாதச் சேர்க்கையே உலகத்தின் கண் எக்காலும் ஓவாது இசைக்கும் ஓங்காரம் என்றும் பிரணவம் என்றும் கூறப்படும். இனி இவ் ஓங்காரவடிவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/70&oldid=1585656" இலிருந்து மீள்விக்கப்பட்டது