உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

மறைமலையம் -19

மக்கள் வாயின்கண் அமைந்திருத்தலின், அவ்வாயின் கட்டோன்றும் அகர இகர உகரங்கள் ஓங்காரத்தின்கட் டோன்றுவனவாகவே கொள்ளப்படும்.

அகர

அற்றேல், அகரவொலி எல்லாவற்றிற்கும் முதலாய் நிற்கும் இறைவன் போல்வதென்று முன்னே கூறி வைத்து, ப்போது அஃது ஓங்காரத்தின்கட் பிறக்கு மெனக் கூறுதல் மாறாய் முடியுமேயெனின், அற்றன்று, அகர உகரக் கூறுகள் விரவி இசைப்பதே ஓகாரமாகும், அங்ஙனம் விரவிய அக்கலவையொலியுள்ளும் வாலியே முதல் நிற்பதாகலின் அது மாறுகொள்ளாது. மேலும், அகர உகரங்கள் பிரிந்திசைத்தலையே பிறத்தல் என்று ஓதியதல்லது ஓகாரம் வேறாய் அகர உகரங்கள் வேறாய்ப் பிறக்கும் என்பது கருத்தன்று. அற்றேல், ஓகார வடிவிற்றாகிய வாயின்கண் அகர உகர ஒலிகள் தோன்றக் காண்டுமே யெனின்; வரிவடிவும் ஒலி வடிவுமென வடிவுதான் இருவகைப்படுதலின், வாய்வடிவு ஓகாரத்தின் வரிவடிவாய் நிற்க, அதனுள் இசைக்கும் ஓ என்னும் ஓசை ஒலிவடிவாய் நடைபெறும். ஒலியும் வரியுமென வடிவால் வேறுபடினும் தன்மையால் அவை இரண்டும் ஒன்றேயாதலின் ஒன்று மற்றொன்றினுட் டோன்றல் பற்றி அவையிரண்டும் வேறு வேறென்று கொள்ளற்க. ஓவென்னும் ஒலி இசைக்குங்கால் ஓகார வரிவடிவும், ஓகார வடிவினை யுடைய சைக்கருவிகளின் கண் ஓவென்னும் ஒலிவடிவும் தோன்றுதலை அயல்நாட்டறிஞர் சய்து விற்கும் ஒலியெழுதி* என்னுங் கருவியிற் கண்டுதெளிக. இங்ஙன மாகலின் ஒன்று மற்றொன்றிற் றோன்றல் கொண்டு முன்னது இது பின்னது என்று முடிவுகட்டல் ஏலாதென்க. ஆகவே, ஓவென்னும் பிரணவ ஒலியுள்ளும் முதல் நிற்பது அகரமேயாதலின், அதுவே எல்லா எழுத்தொலிகட்கும் முற்பட்டதென்பது மறுக்கப்படாத உண்மையாம் என்க. அது

நிற்க.

து

எகரம்: இது கலவை எழுத்தாகும். இவ்வெழுத்தைச் சொல்லுங்கால், வாய் திறத்தலும் நாவின் விளிம்பு மேல் பல்லின் அடியைப் பொருந்துதலும் நிகழ்தலால், வாய் அங்காப்பிற்கு உரிய அகரமும் நாவின் எழுத்தாகிய இகரமும் இதன்கண் விரவியிருக்கின்றன. அதனால், இது கடவுட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/71&oldid=1585657" இலிருந்து மீள்விக்கப்பட்டது