உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கோவை

39

L டன்மையும் உயிரின்றன்மையும் ஒருங்கு கலந்த குணிருத்திரரைக் குறிக்கும் அடையளமாகக் கொள்ளப்படும். இவ்வெழுத்தின் நீட்டமே ஏகாரமாம் குணிருத்திரருள்ளும் மேன்மை மிக்கவராய் இறைவனருளை நோக்கி நிற்பாரை இவ் ஏகாரம் அறிவிக்கின்றது.

ஐகாரம்: இதுவுங் கலவை எழுத்தாகும். இதனுள் அகரம் இகரம் என்னும் உயிரெழுத்தொலிகளும் ய் என்னும் மெய்யெழுத்தொலியும் விரவிநிற்கின்றன. இவ்வெழுத்தின் கண் அகரக்கூறாகிய கடவுட்டன்மை சிறிதும், இகரக் கூறாகிய உயிரின்றன்மையும் யகரக் கூறாகிய மெய்யின் றன்மையும் பெரிதுமாய்க் கலந்து நிற்றலால், கடவுட்டன்மை சிறிதாய் உயிரின்றன்மையும் பிரகிருதிமாயையின் தொடர்பும் பெரிதுமாய் அமைந்த நான்முகன் திருமால் என்னுந் தெய்வங்கட்கு அறிகுறியாய் இவ் ஐகார எழுத்து நிற்பதாகும் என்று உணர்ந்துகொள்க. இவ்வெழுத்தின் கட் கலந்து காணப்படும் அகர இகரங்கள் தோற்றம் நிலையென்னு ருவகைத் தொழில்களையுங் காட்டுதலாலும் படைப்பு நிலையென்னும் இரண்டிற்குரிய தெய்வங்களை உணர்த்துவது பொருத்தமேயாம் என்க.

இது

ஓகரம்: இதுவுங் கலப்பெழுத்தே யாகும். இதன்கண் விரவி நிற்கும் ஒலிகள் அகரமும் உகரமும் ஆகும். இனி அகரம் னி கடவுட்டன்மையினையும், உகரம் இறைவன் றிருவடியை நோக்கி மேலெழும் தூய உயிரினையும் குறிப்பனவாகலின், கடவுட்டன்மையும் தூய உயிரின்றன்மையும் ஒருங்கமைந்த சீகண்ட உருத்திரரை இவ்வெழுத்து அறிவிப்பதாகும். அகர உகரங்கள் தோற்ற ஒ ஒடுக்கங்களாகிய தொழில்களை உணர்த்துதலின் அராக தத்துவத்தின் கீழ் நின்ற உலகங்களின் தோற்ற ஒடுக்கங்களுக்குக் காரணரான அவ்வுருத்திர மூர்த்தியை இவ்வெழுத்து அறிவிக்கும் அடையாளமாம் என்றல் வாய்ப்புடைத்தேயாம். இனி இவ் ஒகரத்தின் நீட்டமே ஓகாரமாகும். இது சீ கண்ட உருத்திர புவனத்திற்கும் மேலுள்ள மகேசுரரை உணர்த்தும்.

ஒளகாரம்: இதுவும் அ உவ் என்னும் மூன்று ஒலிகளின்

சேர்க்கையான்

ஆய ய கலப்பெழுத்தாம். அ என்பது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/72&oldid=1585658" இலிருந்து மீள்விக்கப்பட்டது