உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

மறைமலையம் 19

கடவுட்டன்மையினையும் உ தூய உயிரினையும் வ் சுத்த மாயையினையும் உணர்த்தும். வ் என்பது சுத்தமாயையினை உணர்த்துதல் யாங்ஙனம் எனின்; இவ்வெழுத்து மெய்யாய் நிற்பினும், உயிரெழுத்தின் முன் உயிரெழுத்து வரும்வழி அவை யிரண்டனையும் உடம்படுத்துதற்கு இடைவந்து நிற்றலின் இதன்கண் உயிரெழுத்தின் றன்மையும் சிறிதுள தென்பது பெற்றாம். இவ்வாறு இஃது உயிர்த்தன்மையும் மெய்த்தன்மையும் உடையதாதல் போலச், சுத்தமாயையும் L மாயையாதலோடு இறைவனோடு ஒற்றுமைப்பட்டு நின்று அவற்கொரு சத்தியாய் அமைதலின் அஃது அச்சேர்க்கை யால் இறைமைத் தன்மையும் சிறிது உடைத்தாம். ஆகையால், வகாரம் சுத்தமாயைக்கு அடையாளமாமென்று கொள்ளப் படும். இனிக் கடவுட்டன்மையும் கடவுட்டன்மையும் உயிரின்றன்மையும் சுத்தமாயையின் சேர்க்கையும் உடையவர் சதாசிவமூர்த்தியே யாகலின், ஒளகாரம் அவரை அறிகுறியாய் நிற்குமென்று ஓர்ந்து கொள்க.

அடையாளம்

அற்றேல், வகரத்தைப் போல் யகரமும் உயிர்களை உடம் படுத்துதற்கு வருதலின் இதனையும் சுத்தமாயையின் என்று உரையாமை என்னையெனின்; மேலெடுத்துக்காட்டிய உயிரெழுத்துக்களில் இகாரம் கீழ் நின்ற உயிர்களுக்கும், உகாரம் மேல்நின்ற உயிர்களுக்கும் அடையாளங்களாமென வகுத்துக் காட்டினமாதலின், இகாரத்தோ டொத்த உயிர்களை உடம்படுத்து தற்கு வரும் யகரமெய் கீழ்நின்ற உயிர்களோடு இயைந்து நிற்கும் பிரகிருதி மாயையினையும், உகாரத்தோடொத்த மேல் நின்ற உயிர்களை உடம்படுத்துதற்கு வரும் வகர மெய் சுத்தமாயை யினையும் அறிவிக்குமென உரைத்தாம் என்க.

இவ்வாறு மேலெடுத்துக் காட்டிய பன்னீருயிர்

ஈஎ

எழுத்துக்களிலும் முதல் நின்ற அகர ஆகாரங்கள் இரண்டும் எல்லாம் வல்ல முழுமுதற் கடவுளை உணர்த்தும் ஒலிகளாய் முதல் நிற்ப, எஞ்சிய பத்தில் இகர இனத்திற் சேர்ந்த இ ஈ எ ஏ ஐ என்னும் ஐந்தும் கீழ்நின்ற உயிர்களையும், உகர இனத்திற் சேர்ந்த உ ஊ ஒ ஓ ஓள என்னும் ஐந்தும் மேல்நின்ற உயிர் களையும் உணர்த்துதல் கண்டுகொள்க. அற்றேல், முழுமுதற் கடவுளை யுணர்த்தும் அகரம் முதல் நின்றாற்போல,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/73&oldid=1585659" இலிருந்து மீள்விக்கப்பட்டது