உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கோவை

41

தூயவான உயிர்களை உணர்த்தும் உகர முதலாகிய ஐந்தும் அவ் அகரத்தை அடுத்தன்றே நிற்றல் வேண்டு மெனின்; அற்றன்று, கடவுளை முன் உணர்த்தி, மலக்கட்டிற் கிடக்கும் எல்லா உயிர்களையும் அதன்பின் உணர்த்தி, கட்டுவிட்டுக் கடவுளை நோக்கிச் செல்லுந் தூய உயிர்களை அதற்குப் பின் உணர்த்துதலே முறையாகலின் அம்முறைபற்றி அ இ உ என வைத்து, அவற்றின் நீட்டங்களை அவற்றை யடுக்க வைத்தார். குறிலும் நெடிலுமாகிய இவ்வாறெழுத்தின்பின்னர் எ ஏ ஐ என்னும் மூன்றெழுத்துக்களை வைத்த முறையாதெனின், கீழ்நோக்கிச் செல்லும் முறையில் அகர இகரக் கலப்பாலாகிய எகர உயிரினையும் அதன் நீட்டமாகிய ஏகாரத்தினையும் முன்வைத்து, அதன்பின் அகர இகரங்களாகிய உயிர்க்கலப் போடும் ய் என்னும் மெய்க்கலப்புமுடைய ஐகாரத்தை ய் வத்தார்.

இங்ஙனமே அகரமாகிய கடவுட்டன்மையும் இகர மாகிய உயிரின் தன்மையுங் கலந்த ருணிருத்திரர் மேலும் ய் என்னும் பிரகிருதி மாயைக்கலப்பும் உடையராய் அவரினுந் தாழ்ந்த நான்முகனுந் திருமாலும் அவர்க்குக் கீழுமாய்த் தத்துவ உலகங்களில் இருப்பரென்க. இனிக் கட்டு நீங்கி மேல் நோக்கிச் செல்லும் உயிர்க்கு அடையாளமான உகரமும் அகரமுங் கலத்தலாற் றோன்றும் ஒகரத்தை ஐகாரத்தின் பின் மேல்நோக்கிச் செல்லும் முறையில் முதல் வைத்து அதன் நீட்டத்தை அதன்பின் வைத்து, அகர உகரங்களோடு அரைப் பங்கு உயிர்போ லியங்கும் எ என்னும் மெய்யெழுத்துங் கலந்த ஔகாரத்தை அதன் பின் வைத்தார். இங்ஙனமே, கட்டு நீங்கி மேல் நோக்கிச் செல்வாரான சீகண்ட உருத்திரர் முதலிலும், அவர்க்கு மேற்பட்ட அநந்த தேவர் அவர்க்கு மேலும், எ என்னுஞ் சுத்தமாயைக் கலப்புமுடைய சதாசிவர் அவர்க்கு மேலுமாய் மேற்பட்ட தத்துவ உலகங்களில் நிற்பரென்க. அநந்த தேவரும் சுத்தமாயைக் கலப்புடையராகச், சதா சிவரை மட்டும் அஃதுடையராகக் கூறிய தென்னை யெனின், அநந்ததேவர் அசுத்தமாயையை அடுக்க உளராய்ச் சுத்த மாயையின் கீழ்நிலையில் நிற்பவராகச், சதா சிவரோ அசுத்தமாயையை முற்றும் அகன்று சுத்தமாயையின் மேல்நிலைக்கண் வைகுவராதலின் அச் சிறப்புப்பற்றி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/74&oldid=1585661" இலிருந்து மீள்விக்கப்பட்டது