உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

மறைமலையம் -19

அவர்க்கே அது வரைந்து கூறினாம் என்க. அற்றாயின், ஓரறிவு முதல் ஐயறிவு காறும் உடைய சிற்றுயிர்களும், ஆறறிவுடைய உ மக்கள் முனிவர் தேவர் முதலான பேருயிர்களும் இப்பன்னீ ருயிரெழுத்துக்களில் எதன்பால் அடங்குவரெனின்; ய்

என்னும் மெய்க்கலப்புடைய ஐகாரவுயிரின்பால் அடங்குவர். நான்முகன் திருமால் முதல் ஓரறிவுயிர்கள் ஈறாகவுள்ள எல்லாம் சகலர் எனக் கூறப்படுவரென்று அறிவு நூல்கள் கூறுதலால், ஈண்டு அவர் ஐகாரத்தின்பால் அடங்குவ ரென்றால் பெரிதும் பொருத்தமாவதேயாம்.

இவ்வாற்றால் அகரம்முதல் ஒளகாரஇறுவாயாகக் கிடந்த பன்னீரெழுத்துக்களுமே உயிரெழுத்துக்கள் எனப் படுதற்கும், இவை தமிழ்மொழியின்கண் ஒன்றன் பின் ஒன்றாக அடைவுபடுத்து நிறுத்தப்பட்ட முறையே முறை எனப்படு தற்கும் உரிமையுடையனவாம். இஃது இவ்வாறாகவும், வடநூலால் தமிழின் நெடுங்கணக்கைப் பார்த்து உயிரெழுத்து மெய்யெழுத்துக்களை அடைவு படுத்திக் கொண்ட அளவின் அமையாது, தமிழினுந் தமக்கு உயிரெழுத்துக்கள் மிகுதியாய் உண்டென்று காட்டுதற்குப் புகுந்த பொருந்தாப் பேரவாவால் உயிரெழுத்துக்கள் அல்லாத ரு ரூ லு லூ அம் அஃ என்னும் உயிர்மெய் யெழுத்துக்களையும் அவற்றோடு கலந்து இழுக்கினார்; இவ்வாறெழுத்துக்களிற் கலந்த குற்றியல் உகர ஊகாரங்களையும் அகரங்களையும் நீக்கினால் எஞ்சி நிற்பன ர் ல் ம்ஃஎன்னும் மெய்யெழுத்துக்களும் ஆய்தமுமே யாகலின் அவர் உயிர் எழுத்துக்களைப் பன்னிரண்டன் மேலாகப் படைத்திட்டுக் கொண்டது வெறும்பேலியே யாம் என்க.

லுலூ

ஃ- ஆய்த எழுத்து. இனி உயிரெழுத்தும் அல்லாதாய் மெய்யெழுத்தும் அல்லாதாய்த் தனித்து நிற்றலிற் றனிநிலை யென்னும் பெயர் வாய்ந்த ஆய்த எழுத்தின் உண்மை

யா

தனின் னின் அதனையுஞ் சிறிது விளக்கிக் காட்டுதும். வ்வாய்தம் எழுத்தொலியாய்ச் சொல்லின் கண் நின்று பொருளை அறிவுறுத்தலின் இது விந்துவின்கணின்றும் பிறப்பதேயாகும். எழுத்தொலியாய்ப் பொருள் அறிவுறுக்கும் ஓசைகளெல்லாம் விந்துவின்கட் பிறப்பனவாகுமென்றும், பொருளறியாத முற்கம் வீளை முதலியன எழுத்தொடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/75&oldid=1585662" இலிருந்து மீள்விக்கப்பட்டது