உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கோவை

து

43

கூடாவாய் விசும்பின்கட் பிறப்பன வாகுமென்றும், அறிவு நூல்கள் கூறா நிற்கும். விந்துவிற் பிறக்கும் ஏனை யொலிக ளெல்லாம் உயிரெழுத்தெனவும் மெய்யெழுத்தெனவும் பிரிந்து பலவேறு உருவினவாய் இயங்க, இவ் ஆய்தவொலி மட்டும் அவ்வுயிர் மெய்களுள் ஒன்றுமாகாமல் இவற்றின் வேறாய்ப் புள்ளிவடிவிற் றனித்து நிற்றலை ஆராயுங்கால் ஏனை யொலிகளெல்லாம் விந்துவின் காரியவொலிகளாய்த் தோன்ற, இஃதொன்றுமட்டும் அங்ஙனங் காரியவொலி யாகாமல் விந்து வென்னும் அக்காரணத்தின் ஒலி வடிவாம் என்பது துணியப்படும். இது விந்துவென்னுங் காரணத்தின் ஒலிவடிவாதல் பற்றியே இதற்கும் புள்ளி வடிவு சொல்லப் பட்டிருக்கின்றது. விந்துவென்பது புள்ளி வடிவின தாதலைச் சிவஞானபோத ஆராய்ச்சியில் விரித்து விளக்கியிருக் கின்றேம்; ஆண்டுக் கண்டு கொள்க. அற்றேல், ஆய்தம் வரிவடிவில் எழுதப்படுங்கால் ஒரு புள்ளியிட்டு எழுதப் படாமல், மூன்று புள்ளியிட்டு எழுதப்படுதல் என்னை யெனின்; விந்து மாயையின் ஒலி தன் நிலையில் ஒலிப்பதாயின் ஒற்றைப் புள்ளியே பெறும்; அவ்வாறன்றி அது அசுத்த மாயையை ஊடுருவி அதன் பின் பிரகிருதி மாயையை ஊடுருவி இயங்குதலால், தான் தனித்து இயங்கு நிலையில் ஒரு புள்ளியினையும், அசுத்த மாயையை ஊடுரு வி இய நிலையில் மற்றொரு புள்ளியினையும், பிரகிருதிமாயையை ஊடுருவி இயங்குநிலையிற் பின்னும் ஒரு புள்ளியினையும் ஆக மூன்று புள்ளியினைப் பெறுவதாயிற்றென்று உணர்ந்து கொள்க. ஈண்டுப் புள்ளி என்றது அது சுழிந்து இயங்கும் வட்டவடிவினையே யாம்.

L

யங்கு

அற்றாயின், விந்துவின் ஒலிகளுள் ஆய்தம் ஒன்றனை மட்டும் அவ் விந்துவினோடு ஒற்றுமைப் படுத்திக் காரண வொலி என்றும், மற்றையெல்லா ஒலிகளையும் காரிய ஒலிகள் என்றும் இருவேறு வகைப்படுத்துக் கூறுதலென்னை? மிக நுண்ணிய அவ்வொலிகளுள் இது காரணம் மற்று இவை இ காரியம் என்பது அறியப்பெற்றிலமாலெனின்; முதற் காரணப் பொருள் நிமித்த காரணப் பொருளால் துணைக் காரணங் களைக் கொண்டு திரிபுபடுத்தப் படுவதே அதன் காரியமாம் என்றும், முதற் காரணப் பொருள் அங்ஙனம் திரிபுபடுத்தப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/76&oldid=1585663" இலிருந்து மீள்விக்கப்பட்டது