உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

மறைமலையம் 19

படாமல் தன் நிலையில் நிற்பதே அதன் இயற்கைக் காரண நிலையாம் என்றும் பகுத்துணர்ந்து கொள்ளல் வேண்டும். இவ்விரு வேறு நிலைகளையும் ஓர் எடுத்துக் காட்டான் விளக்குவாம். களிமண் என்பது ஒரு முதற் காரணப் பொருள், குயவன் நிமித்த காரணன், அவன் திகிரியுங் கோலுமாகிய துணைக் காரணங்களைக் காண்டு அம்மண்ணைத் திரிவுபடுத்திக் குடம் குடுவை சால் முதலான அதன் காரியப் பா ரு ள்களை 6 வனைந்து வைத்தல் காண்டுமன்றே. அதுபோலவே, விந்து மாயையின் இயற்கைக் காரணவொலி ஆய்தம் என்றும், அக்காரணவொலி உயிர்க் கிழவனாகிய நிமித்த காரணப் பொருளால், தலை மிடறு நெஞ்சு பல் இதழ் நா மூக்கு அண்ணங்களாகிய துணைக்காரணங்களைக் கொண்டு திரிபுபடுத்தப் பட்டு வெவ்வேறு ஒலிகளாகிய காரியங்களாய்த் தோன்றுகின்றன என்றும் உணரற்பாற்று. ஒரே தன்மைத்தாகிய ஆய்தம் என்னும் விந்துவொலி தலை மிடறு நெஞ்சு என்னும் இடங்களைப் பொருந்திப் பல் இதழ் நா மூக்கு அண்ணம் என்னும் உறுப்புக்களின் அசைவாற் பலதிறப்பட்ட எழுத்துக்களாய்க் காரியப் படுத்தப்படலாயிற்று. எனவே, மூன்றிடங்களானும் ஐந்து உறுப்புக்களாலும் திரிபுபடுத்தப்படும் காரிய வொலிகளே வெவ்வேறெழுத்துக் களாமென்பது பெற்றாம். பெறவே, இக்காரிய வொலிகளுக்கு முதலாய் நிற்கும் ஆய்தம் என்னும் காரணவொலி தலை மிடறு நெஞ்சு என்னும் இடங்களைப் பற்றுக்கோடாகக் கொள்ளுதலும், பல் இதழ் நா மூக்கு அண்ணம் என்னும் உறுப்புக்களால் திரிபு படுத்தப் படுதலும் இல்லாத தென்பதூஉம் பெறப்படும். இவ்வாறு இம் மூன்றிடங்கட்கும் ஐந்துறுப் புகட்டும் வேறாய்த் தனித்து நிற்றலினான்றே ஆய்தம் தனிநிலை யெனவும் வழங்கப்பட்டது. இதுபற்றியே ஆசிரியர் தொல்காப்பியனார் ஆய்தத்திற்குப் பிறப்பிட மேனும் உறுப்பின் றொழிலேனுங் கூறிற்றிலர். மற்று இக் கருத்துணராத பவணந்தியாரோ தாமியற்றிய நன்னூலில் “ஆய்தக்கு இடந்தலை அங்கா முயற்சி" எனப் பிழைபடக் கூறினார். உந்தியிலிருந்து போதரும் வளியோடு கலந்த ஒலி தலை மிடறு நெஞ்சு என்னும் மூன்றிடங்களைப் பொருந் தாமலும், பல் இதழ் நா தழ் நா மூக்கு மூக்கு அண்ணம் என்னும்

6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/77&oldid=1585664" இலிருந்து மீள்விக்கப்பட்டது