உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கோவை

45

ஐந்துறுப்புக்களால் மறிக்கப் படாமலும் தன் இயல்பினில் இயங்குவதே ஆய்தம் என்னும் முதற் காரண ஒலியினியற்கை யாம். அவ்வெட்டாலும் தடை செய்யப்பட்டு வேறு வேறாகத் திரிபுற்று நடப்பதே மற்றக் காரிய வொலிகளின் இயற்கை யாம். காரியவொலிகள் ஒவ்வொன்றும் ஒவ்வோரிடத்தைப் பொருந்தி அங்குள்ள உறுப்புக்களால் மறித்து நிறுத்தப் படுதல் காண்க. ஆய்தமாகிய காரணவொலியோ ஓரிடத்தைப் பற்றி நில்லாமலும் உறுப்புக்களாற் றடைசெய்யப் படாமலும் இயங்குதலைச் சொல்லிக் காண்க.

இனிப், பற்றுக்கோடும் தடையுமின்றித் தானே இயங்கு வதூஉம், பற்றுக்கோடுந் தடையும் உற்றுத் தாமே இயங்கு வனவும், பற்றுக்கோடுந் தடையும் உற்றுத் தாமே இயங்கா தனவும் என ஒலி எழுத்துக்கள் தாம் மூவகைய. அவற்றுள் முதலது ஆய்தவொலி; இரண்டாமவை உயிர் எழுத்துக்கள்; மூன்றாமவை ஒற்றெழுத்துக்கள். பற்றுக்கோடுந் தடையும் உற்றுத் தாமே இயங்கும் உயிரெழுத்துக்கள் தமிழ்மொழியில் உள்ளவாறு பன்னிரண்டேயாம் என்பதூஉம், இப்பன்னி ரண்டிற்கு மேற்பட உயிரெழுத்துக்கள் கற்பித்தல் ஒருவாற் றானும் ஏலாதா மென்பதூஉம் மேலே விளக்கிப் போந்தாம்.

இனிப் பற்றுக்கோடுந் தடையும் பெற்றுத் தாமே

இயங்காவாய் உயிரெழுத்துக்களின் உதவியால் இயங்கும் மெய்யெழுத்துக்கள் தமிழில் உள்ளவாறு பதினெட்டுக் கூறுதலே பொருத்தமாதலும், அவற்றின் உண்மை நிலையும் ஈண்டு ஒரு சிறிது விளக்குவாம்.

டைமை

பொருளாகிய மாயை வன்மை மென்மை இடை என்னும் மூன்று தன்மைகளும் உடையதா தல் போல, ஒலி யெழுத்துக்களாகிய மெய்யும் வல்லினம் மெல்லினம் இடையினம் என மூன்று தன்மைகள் உடையவாம். இவற்றுள் முதல் நா முதல் அண்ணத்தை வலிந்து ஒற்றுதலால் க் என்னும் மெய்யும் மெலிந்து ஒற்றுதலால் ங் என்னும் மெய்யும், இடைநா இடையண்ணத்தை அங்ஙனமே இருவகைப்பட ஒற்றுதலால் ச் ஞ் என்னும் மெய்களும், நுனிநா நுனி அண்ணத்தை அங்ஙனமே ஒற்றுதலால் ட் ண் என்னும் மெய்களும், நுனிநா மேலுள்ள முன்பல்லின் உட்பக்கத்து அடியைப் பரவி அங்ஙனம் இருவகைப்பட ஒற்றுதலால் த் ந் த்ந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/78&oldid=1585665" இலிருந்து மீள்விக்கப்பட்டது