உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

மறைமலையம் 19

என்னும் மெய்களும், மேல்கீழ் இதழ்கள் அங்ஙனம் ஒற்றுதலால்ப்ம் என்னும் மெய்களும் தோன்றுதலின், அவை அவ்வாறு வாயின் அகத்தே அடியிலிருந்து துவங்கி ஒன்றன் பின் ஒன்றாய்ப் பிறந்து பின்னர்ப் புறத்தே இதழின்கண் வந்து முடியும் முறைபற்றி க்ங்ச்ஞ்ட்ண்த்ந்ப் ம் என்று அடைவுபடுத்து வைக்கப்பட்டன.

இனி, மிடற்றினுள் எழுந்த வளியின் ஒலி அண்ணத்தின் முதலைச் சென்று செறிந்து பொருந்துத லானே ய் என்னும் பொருந்துதலானேய் எழுத்தும், நுனிதா மேலண்ணத்தின் இடையைச் சென்று ஒற்றுதலானே ர் என்னும் எழுத்தும், நாவிளிம்பு மேனோக்கிச் சென்று மேலுள்ள முன் பல்லின் உட்புறத்து அடியை ஒற்று தலானே ல் என்னும் எழுத்தும், மேற்பல் கீழ் இதழைப் பொருந்து தலானே வ் என்னும் எழுத்தும் பிறக்கக் காண்டு மாகலின், இந் நான்கும் வாயின் அகத்தே யிருந்து துவங்கிப் புறத்தே வந்து முடியும் அம் முறையே பற்றி ய் ர் ல் வ் என்று ஒன்றன் பின் ஒன்றாக வைக்கப்பட்டன.

இனி, நாவின் நுனி மேனோக்கிச் சென்று இடை யண்ணத்தை முழுதுந் தடவுதலால் ழ் என்னும் எழுத்தும், சிறிது தடவுதலால் ள் என்னும் எழுத்தும், அது நுனியண்ணத்தை வலிந்து ஒற்றுதலால் ற் என்னும் எழுத்தும், மெலிந்து ஒற்றுதலால் ன் என்னும் எழுத்தும் பிறத்தல்பற்றி வாயினகத் திருந்து வரவர முன்வரும் அம்முறையே முறையாகழ்ள்ற்ன் என்னும் அந்நான்கும் ஒன்றன்பின் ஒன்றாய் இறுதிக்கண்

L

வைக்கப்பட்டன.

ம்

இம் மெய்யெழுத்துக்கள் பதினெட்டனுள் முதற் பத்தும் வாயின் அகத்திருந்து புறத்துவந்து முடியும் முறை பற்றி ஒன்றன்பின் ஒன்றாய் வைத்து, அவை முடிந்தபின் ஏனை நான்கெழுத்துக்களும் அங்ஙனமே வாயினகத்திருந்து புறத்துவந்து முடியும் அம்முறையே பற்றி ஒன்றன்பின் ஒன்றாக நிறுத்தி, அவை முடிந்தபின் இறுதியில் நின்ற ஏனை நான்கெழுத்துக்களும் வாயினகத்தேயே இடையண்ணத் திலிருந்து துவங்கி நுனியண்ணத்தில் வந்து முடியும் அம் முறையே முறையாக ஒன்றன் பின் ஒன்றாக வைத்துத் தால்லாசிரியர் நெடுங்கணக்கு வருத்திட்டார் என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/79&oldid=1585666" இலிருந்து மீள்விக்கப்பட்டது