உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கோவை

47

இவ்வொற்றெழுத்துக்கள் பதினெட்டும் உயிரினுதவி யின்றித் தனித்தியங்காமையின், இவற்றின் பிறப்பியல் நன்கு உணர்ந்து கோடற்கு அவற்றை அகரச்சாரியையோடு சேர்த்து கங சஞ என்று கூறிக்காண்க.

உயிருமெய்யுமா

நெடுங்கணக்கினுள்

இம் முப்பதெழுத்துக்களும் ங்ஙனம் ஒன்றன்பின் ஒன்றாய் நின்ற முறை பயில்வார்க்கு இனிது விளங்கும் பொருட்டே ஆ சிரியர் தொல்காப்பியனார் எழுத்தோத்தினுட் பிறப் பியல் கூறினா ராகலின், அப்பிறப்புமுறை பற்றியே இம்முப்பதெழுத் துக்களும் நின்றமுறை கடைப்பிடித் துணரற்பற்று. இம்முறை கடைப்பிடித்துணராமையின் பழைய உரைகாரர் மெய் யெழுத்துக்களுட் பின் நின்ற எட்டெழுத்துக்களும் தத்தமக்குத் தோன்றியவாறெல்லாம் முறை கூறித் தொல்காப்பியனார் கருத்தொடு மாறுபட்டு இழுக்கினார். அது கிடக்க.

L

ஈண்டுக் காட்டிய பதினெட்டு மெய்யெழுத்துக்கள் மட்டுமே செவ்வையாகப் பொருத்தப்பட்ட உறுப்புக் களுடைய மக்கள் குறைபாடில்லாத முயற்சியாற் றம்வாயாற் பிறப்பனவாகும். உந்தியினின்றும் மேலெழுந்த ஆய்தம் என்னும் விந்து காரண ஒலியைத் தன்னிலையில் நேரே இயங்கவிடாது மக்கள் தமது நிறைந்த முயற்சியால் தலை மிடறு நெஞ்சு என்னும் மூவிடங்களில் அதனை நிறுத்திப், பல் இதழ் நா மூக்கு அண்ணம் என்னும் ஐந்துறுப்புக்களால் அதனைப் பலவேறுபடத் திரித்துப் பல ஒலிகளாக வெளி விடுகின்றனர். இனி, அவ்விந்துகாரண ஒலி குறைபாடில்லாத உறுப்புக்களாலும் குறைபாடில்லாத முயற்சிகளாலும் இயக்கப்படும்வரை இப்பதினெட்டெழுத்தின் மேற்பட்ட லிகள் தோன்றுதற்குச் சிறிதும் இடமே யில்லை. மற்று, இவ்வாறன்றிக் குறைபாடுடைய உறுப்புக்களும் குறை பாடுடைய முயற்சிகளும் இருந்தால் விந்து காரணவொலி செவ்வனே இயக்கப்படாமற் பலவாறாய் இயங்கி அளவுக் கடங்காப் பலதிறவொலிகளை யெல்லாம் தோற்றுவிக்கும். யாங்ஙனமெனிற் காட்டுதும்;

உந்தியினின்றும் எழும் வளியினிசையைத் தடுத்து நாவின் அடியையும் அண்ணத்தின் அடியையும் செவ்வை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/80&oldid=1585667" இலிருந்து மீள்விக்கப்பட்டது