உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

மறைமலையம் 19

யாகப் பொருத்திச் சொல்கின்றுழிக் க என்னும் வல்லோசையும், மெலிதாகப் பொருத்திச் சொல்லுகின்றுழி ங என்னும் மெல்லோசையுமே தோன்றா நிற்கும். நிற்கும். இவ்வாறன்றி அவ்விரண்டு உறுப்புக்களையும் அளவுக்கு மேல் அழுத்திச் சொல்லப் புகுந்தால் விந்துகாரண வொலியாகிய ஆய்தம் அவ்விரண்டன் இடையிற் சிறிது தடைப்பட்டுப் பின்னர் மிகுதியாய்க் கழிந்துவிடும். ஆகவே வடநூலார் கவ்வருக்கத்தில் இரண்டாவதாகச் சொல்லும் எழுத்தைத் தமிழில் கஃஎன்று ஆய்தம் இட்டு எழுதிக் காட்டலாம்.

இனி அடிநாவும் அடியண்ணமும் வலிதாகப் பொருந்து தலால் ககரமும் மெலிதாகப் பொருந்துதலால் ஙகரமும் தோன்றல் இயல்பாதலால் 'திங்கள்' என்னுஞ் சொல்லிற் போல அவ்விரண்டெழுத்தும் ஒன்று சேர்ந்து வருமிடத் தெல்லாம் அக் கரகவொலி க் வடநூலார் இசைக்கும் கவ்வருக்கத்தின் மூன்றாவ தொலியை ஒத்து இசைக்கும்; அதனைத் தமிழில் ங்க என ஙகர வொற்றோடு புணர்த்தி எழுதிக்காட்டலாம். இவ்வாறு நுகர ஒற்றொடு புணர்ந்து இசைக்கும்வழிக் ககரம் இயல்பாகவே அவ்வொலியைப் பறுதலின் தமிழ் நூலார் அவ்வொலியைக் காட்டுதற்கு வரிவடிவில் வேறு குறியீடு வேண்டராயினார். வடநூலாரோ வொற்றோடு கூடாதவழியும் அவ்வொலியைச் செயற்கைப்படுத்துச் சொல்லிச் சொற்களில் இயைத்து வழங்குதலின் அதனை வரிவடிவிற் காட்டுதற்கு வேறுகுறியீடு வேண்டினார். இன்னும் ஙகர வொற்றோடு புணர்ந்துவரும் வழிக் ககரத்திற்கு உண்டாம் இவ்வியற்கை ஓசைக்கும் மாறாக அவர் ‘குங்குமம்' முதலான சொற்களில் ஙகரவொற்றின் பின் நின்ற ககரத்தை வல்லோசைப்படச் செயற்கைப் படுத்துங் கூறுவார்.

ஙகர

இனி,

நாவினடியையும்

அண்ணத்தினடியையும்

மெலிதாகப் பொருத்திப் பின் உரக்கச் சொல்லுங்கால் கவ்வருக்கத்தில் நான்காவதாய் நின்ற எழுத்துத் தோன்றும். மெல்லப் பொருந்திய அவ்விரண்டு உறுப்புக்களும் உரக்கக் கூறும் முயற்சியால் பக்குவிட்டு அகலுதலின் ஆண்டு ஆய்த வொலி மிகுந்து கழிகின்றது. அந்நான்காவது எழுத்தைத் தமிழில் ங்கஃ என்று எழுதிக் காட்டலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/81&oldid=1585668" இலிருந்து மீள்விக்கப்பட்டது