உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கோவை

ஞ்

49

இங்ஙனமே சவ்வருக்கத்தில் இடைநா இடையண்ணத் தைப் பொருந்த இயல்பாற் பிறக்கும் சகர வெழுத்தைப் பின்னும் அழுத்தி உரக்கச் சொல்லுதலால் ஆய்தவொலி மிகக் கழிந்து இரண்டாமெழுத்துத் தோன்றுதலின் அதனைத் தமிழில் சஃ என்றும், அவ்விரண்டு உறுப்பும் மெலிதாக ஒற்றுதலாற் பிறக்கும் ஞ் என்னும் மெல்லொற்றின் பின் வருடம் சகரம் ‘தஞ்சம்’ என்னுஞ் சொல்லிற் போல இயற்கை யாகவே மெல்லென்றிசைத்தலின் வடநூலார் கூறும் அம் மூன்றாம் ஒலியைத் தமிழில் ஞ் ச என்றும், அங்ஙனம் மெல்லத் தோன்றும் இவ்வொலியை உரக்கக் கூறுதலால் ஆய்தவொலி மிகக்கழியச் சகரவருக்கத்தின் நான்காம் ஒலி தோன்றுதலின் அதனைத் தமிழில் ஞ் ச ஃ என்றும் எழுதிக் காட்டலாம் என்க.

L

ம்

இங்ஙனமே டவ்வருக்கத்தில் நுனிநா நுனியண்ணத்தை ஒற்ற இயல்பாற் பிறக்கும் டகரவெழுத்தைப் பின்னரும் அழுத்தி உரக்கக் கூறுதலால் ஆய்தவொலி மிகக் கழிய வடநூலார் கூறும் இரண்டாம் எழுத்துத் தோன்றுதலால் அதனைத் தமிழில் டஃ எனவும், அவ்விரண்டுறுப்பும் மெல்லப் பொருந்துதலாற் பிறக்கும் ண் என்னும் மெல்லொற்றின் பின்வரும் டகரம் ‘பண்டம்' என்னுஞ் சொல்லிற்போல இயல் பாகவே மெல்லென்று ஒலித்தலால் அவர் கூறும் அம்மூன்றாம் ஒலியைத் தமிழில் ண்ட எனவும், இவ்வாறு மெலிதாகத் தோன்றும் இவ்வொலியை உரக்கச் சொல்லுதலால் ஆய்த வொலி மிகக்கழிய அவர் கூறும் நான்காம் ஒலி பிறத்தலின் அதனைத் தமிழில் ண் ட ஃ எனவும் எழுதிக்காட்டலாம் என்றுணர்க.

இன்னும் இங்ஙனமே நுனிநா மேலுள்ள முன் பல்லின் உட் பக்கத்துஅடியைப் பரவி ஒற்றுதலால் இயல்பாய்த் தோன்றும் தகரவெழுத்தைப், பின்னும் அழுத்தி உரக்கச் சொல்லுதலால் ஆய்தவொலி மிகக் கழிய வடநூலார் கூறும் இரண்டாம் எழுத்துத் தோன்றுதலின் அதனைத் தமிழில் தஃ என்றும், அவ்விரண்டுறுப்பும் மெலிதாக ஒற்றுதலாற் றோன்றும் ந் என்னும் மெல்லொற்றின் பின் வரும் தகரம் நுந்தம்’ என்னுஞ் சொல்லிற்போல் இயல்பாகவே மெல்லென்று இசைத் தலால் அவர்கூறும் அம்மூன்றாம் எழுத்தைத் தமிழில்

66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/82&oldid=1585669" இலிருந்து மீள்விக்கப்பட்டது