உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

மறைமலையம் 19

ந்த உரக்கச் சொல்லுதலால் ஆய்தவொலி மிக்குச் செல்ல அவர் கூறும் நான்காம் ஒலி தோன்றுதலின் அதனைத் தமிழில் ந்தஃ என்றும் எழுதிக்காட்டலாம் என்றுணர்ந்து கொள்க. தகர நகரங்களை அடுக்கத் தோன்றும் றகர னகரங்கள் வடமொழியினும் பிறவற்றினும் காணப்படா

என்க.

இனி, மேல்கீழ் இதழ்கள் ஒன்று பொருந்துதலால் இயல்பாகத் தோன்றும் பகரவெழுத்தைப், பின்னும் அழுத்தி உரக்கக் கூறுதலால் ஆய்தவோசை மிகுந்து செல்ல வட நூலார் பகர வருக்கத்திற் சொல்லும் இரண்டாம் ஒலி லி பிறத்தலின் அதனைத் தமிழில் பஃ என்றும் அவ்விரண்டிதழ் களும் ம் மெல்ல ஒற்றுதலாற் பிறக்கும் ம் என்னும் மெல்லொற்றின் பின் வரும் பகரம் ‘நம்பன்' என்னுஞ் சொல்லிற்போல இயல்பாகவே மெல்லென்று ஒலித்தலால் அவர் கூறும் மூன்றாம் எழுத்தைத் தமிழில் ம்ப என்றும், இங்ஙனம் மெல்லெனப் பிறக்கும் இவ்வொலியை உரக்கக் கூறுதலால் ஆய்தவொலி மிகுதியாய்க் கழிய அவர் கூறும் நான்காம் ஒலி தோன்றுதலின் அதனைத் தமிழில் ம்பஃ என்றும் எழுதிக்காட்டலாம் என்க.

இக்கூறியவாற்றல், வாயின் உறுப்புக்களை நிறைந்த முயற்சியோடு பொருத்துகின்றுழி இயல்பாகப் பிறக்கும் வல்லொற்றுகள் தமிழில் உள்ளவாறு கசடதபற என்னும் ஆறேயாமென்பதூஉம், இவ்வாறனுள் றகரம் அல்லாத மற்ற ஐந்து மெய்களையும் நிறைந்த இயற்கை முயற்சியை விட்டுக் குறைபாடுடைய செயற்கை முயற்சி யால் உறுப்புக்களை வலிந் தொற்றியும் மெலிந்தொற்றியும் ஆய்தவொலியைத் தடைப் படாமற் செல்லவிட்டும் வெவ்வேறு பத்துமெய்களாக வடநூலார் திரித்துக் கொண்டமையின் அப்பத்து மெய்களை யும் மேலை ஐந்து வல்லொற்றுக்களுக்கு இனமான மெல் லொற்றுக்களுடன் அவ் வல்லொற்றுக்களைச் சேர்த்தும், அவ் வல்லொற்றுக் களின் பின் ஆய்தவெழுத்தைச் சேர்த்தும் தமிழ் எழுத்துக் களாலேயே அவற்றை எழுதிக் காட்டலா மென்பதூஉம் நன்கு விளங்கும்.

அற்றேல், வடமொழி மெய்யெழுத்துக்களும் இறுதிக் கண் நின்ற நான்கு மெய்யெழுத்துக்களையும் தமிழின்கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/83&oldid=1585670" இலிருந்து மீள்விக்கப்பட்டது