உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கோவை

51

தமிழ் எழுத்துக்களாலேயே எழுதிக் காட்டுமாறு யாங்ஙன மெனின்; அம்முறையினையும் ஒருசிறிது விளக்கிக் காட்டுதும். டைநா இடையண்ணத்தைச் செவ்வனே பொருந்த இயல் பாற் பிறக்கும் சகரவொலியை அங்ஙனம் அவ்வுறுப்புக்கள் சவ்வனே பொருந்தாமல் வைத்து ஆய்தவொலி தடையின்றிச் செல்லுமாறு விட்டுச் சொன்னால் அந்தச் சகர வொலியே அவர்கூறும் அவ்வொலியாய் இசைப்பதைக் காணலாம். அவ்வொலியை வரிவடிவில் எழுதிக்காட்டல் வேண்டின் ஆய்தவெழுத்தைச் சேர்த்து ஃச என்று எழுதுக. று ஃசதம் என்றெழுதிச் சொன்னால் வடமொழியில் உள்ள மெய்யின் ஓசையைத் தமிழ்ச் சகரமே காட்டா நிற்கும்.

இனி, அதற்கடுத்த ஷ் என்னும் வடமொழியோசை நுனி நா நு. னியண்ணத்தைப் பரந்து சென்று சிறிது ஒற்றி இடை டையே ஆய்தவொலி தடைப்படாது செல்லுதலாற் றேன்றுவதாகும். தமிழின்கண் உள்ள ழ் என்னும் ஒலி நுனிதா மேலண்ணத்தின் நடுவைச் சென்று தடவுதலானே பிறப்பதென்பது மேலே காட்டினமாகலின், நுனி நாவின்றொழிலாற் பிறக்கும் ஷ் என்னும் வடமொழி ஓசையும் ழ் என்னுந் தமிழ் ஓசையும் ழ் தம்முள் ஒப்புமையுடைய வென்பது நன்கு விளங்கும். ஆகலான், ழ் என்னும் ஒலியில் தடைப்பட்டு நின்ற ஆய்த வொலியை நாவின் நுனி வழியே தடைப்படாது செல்லவிடுத்தால் ஷ் என்னும் வடமொழி எழுத்தோசை தானே தோன்றுவதாகும். ஆதலினால் ழ் என்னும் தமிழ் எழுத்தின் பின் ஆய்த வொலியைச் சேர்த்து ழ்ஃ என்று கூறினால் ஷ் என்னும் வடமொழி ஓசை பிறக்கும் என்று உணர்ந்து கொள்க. ஆகவே, ஈண்டும் குறைபாடில்லாத முயற்சியாற் றோன்றுவது ழகரமாகுமென்றும் குறைபாடுடைய முயற்சி யாற்றேன்றுவது ஷகரமாகுமென்றும் நுண்ணியதாகச் சொல்லிக் காண்க.

இனி னி வடமொழிக்கண் உள்ள ஸ் என்னும் ஒலி தமிழின்கண் ல்லையாலோ வெனின்; அதுவு னின்; அதுவுங் குறை பாடுடை ய முயற்சியாற் றோன்றும் சகரவோசையே யாமென்பதூஉம் ஒருசிறிது விளக்குவாம். டைநா இடையண்ணத்தைப் பொருந்துதலாற் பிறக்கும் சகர வெழுத்தின்கண் தடைப்பட்டு நின்ற ஆய்தவொலியை அங்ஙனம் தடைப்பட்டு நிற்கவிடாது நேரே செல்ல விடுத்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/84&oldid=1585671" இலிருந்து மீள்விக்கப்பட்டது