உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

மறைமலையம் 19

அச்சகரவொலி மாறி நுனி நாவில் வந்து நிற்கப் பின்னும் அவ்வாய்த ஒலியைச் செல்லவிட்டால் ஸ் என்னும் அவ்வ மொழியோசை தோன்றக் காணலாம். அவ்வொலியைத் தமிழில் ஃசஃ என்று சகரத்தின் முன்னும் பின்னும் ஆய்த எழுத்திட்டு வரிவடிவில் எழுதிக் காட்டலாம்.

னி, வடமொழி நெடுங்கணக்கிற் கடைநின்ற ஹ் என்னும் ஒலி தமிழின்கண் உள்ள ஃ என்னும் ஆய்த வொலியே யாகலின், அதனை மொழி முதலிலும் இடையிலுஞ் சேர்த்து வடநூலார் 'ஹரன்' ‘அஹம்' என வழங்குஞ் சொற்களைத் தமிழில் ‘ஃஅரன்’ அஃஅம்' என ஆய்தவெழுத்திட்டு எழுதிக்காட்டலாம் என்க.

இவ்வாறு தமிழில் இல்லாமல் வடமொழி நெடுங் கணக்கின் மட்டுங் காணப்படும் சில ஒற்றெழுத்துக்கள் அத்துணையும், தமிழின்கண் நிறைந்த முயற்சியாற் பிறக்கும் ஒற்றெழுத்துக்கள் சிலவற்றைக் குறைந்த முயற்சியால் ஆய்தவொலியைத் தடைப்படாது த செல்ல விடுத்துப் பிறப்பிக்கத் தோன்றுவனவே யாகுமல்லாமல் உண்மையான் நோக்குங்கால் அவை தனித்தனி மெய்யெழுத்துக்கள் ஆகமாட்டாவென்பது தெற்றெனப் புலப்படும். விந்துவின் இயக்கம் மாயாகாரியப் பொ பாருள்கள் அத்துணையும் இயங்குவதற்குக் காரணமாய் நின்றாற்போல, அவ்விந்துவின் ஒலியாகிய ஆய்தமும் உயிர் ஒற்று என்னும் எல்லா ஒலிகளின் இயக்கத்திற்குங் காரணமாய் நிற்கும் என்க. அற்றேல், அகரவொலி ஒன்றுமே எல்லா வெழுத்தொலிகட்குங் காரணமாய் முன் நிற்பதென்பது எல்லார்க்கும் ஒப்ப முடிந்ததாக ஈண்டு அதனைவிடுத்து, ஆய்த வொலியே அதற்கும் முற்பட்ட காரணமாய் நிற்கும் எனக் கூறிய தென்னை யெனின்; உந்தியினின்றும் எழுந்த வொலியே தலை மிடறு நெஞ்சு என்னும் மூன்றிடங்களின் நிலைபெற்றுப் பல் இதழ் நா மூக்கு அண்ணம் என்னும் உறுப்புக்களின் றொழி லால் வெவ்வேறு ஒலி எழுத்துக்களாய்த் திரிபெய்துகின்றது என்றல் எல்லா ஆசிரியர்க்கும் ஒப்ப முடிந்தமையானும், அக்காரணவொலியின் முதற்காரிய ஒலியே அகரவுயிராக லானும், அங்காந்து கூறுங் காரியப்பாட்டாற் பிறக்கும் அகர ஒலியை முதற்காரணமென்றல் அமையாமையானும் அவ்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/85&oldid=1585672" இலிருந்து மீள்விக்கப்பட்டது