உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவுரைக்கோவை

53

அகர வொலிக்கும் முற்பட்ட காரணமாய் உந்தியினின்று எழும் ஆய்தவொலியே எல்லா எழுத்தொலிகட்கும் முதலா மென்க. அங்ஙனமாயின் “அகர முதல எழுத்தெல்லாம் என்று ஆசிரியர் தெய்வப் புலமைத் திருவள்ளுவ நாயனார் கூறியதென்னை யெனின்; சொற்களில் இயைந்து பொருள் அறிவுறுக்கும் எழுத்தோசைகள் எல்லாவற்றுள்ளும் முன்நிற்பது அகர வொலியேயாதல் பற்றி அவ்வாறு கூறினார். அல்லதூஉம் அகரவொலி என்றேனும் அகர வெழுத்தென்றேனுங் கூறாமல் அவையிரண்டற்கும் பொதுப் பட அகரம்' என்று கூறினாமையால் அகர வொலியும் பிறவெழுத்தொலிகளுந் தோன்றுதற்கு இடமாய் அங்காந்த ாயின்கண் நிற்கும் இடை வளியே அகரமா அகரமாமெனக் கருதினார் என்று கோடலும் இழுக்காது. இவ்விடைவெளி வாயிலிருந்து மிடற்றின் வழியாய் உந்திவரையில் நிற்றலும், இங்ஙனம் வாயின் கண் வட்டமாயும் பின்னர் மிடற்றிலிருந்து நீளமாயும் செல்லும் இது வரிவடிவில் எழுதப்படும் அகரத்தின் வடிவு போன்றும் காணப்படுதலும் உற்று நோக்க வல்லார்க்கு இவ்விடை வெளியே விந்துகாரண வொலியாகிய ஆய்தமும் அதன் காரியங்களாகிய அகர முதல் னகர இறுவாயான முப்பதெழுத்துக்களுந் தோன்றுதற்கு நிலைக்களனாம் என்பது இனிது விளங்கா நிற்கும். இவ்விடை வெளியாகிய அகரம் காரண காரியவொலிகள் எல்லாவற்றிற்கும் பிறப்பகமாய் நிற்றல்போல, எல்லாமாய் அல்லதுமாய் எங்கு மாய் நிற்கும் இறைவனும் உலகுயிர்கள் எல்லாவற்றிற்கும் பிறப்பகமாய் நிற்பனென்பதே ஆண்டு ஆசிரியர் கருத்தாதல் துணியப்படும். எனவே, மிக நுண்ணிய இடைவெளி வடிவாய் நிற்கும் அகரமும், அவ்வெளியின் கட்டோன்றி யியங்கும் விந்து காரண வொலியின் முதற் காரியமாய் ஒலிக்கும் அகரமும், அவ்வொலியின் அடையாளமாய் வரிவடிவில் எழுதப்படும் அகரமும் என அகரம் மூவகைத்தாதலும் பெறப்படும் என்க.

து

இனி, இவ்வாறு எல்லா எழுத்தொலிகட்கும் முதற் காரணமாய் நிற்கும் ஆய்தொலி எழுத்தை முதலெழுத் தென்னாது சார்பெழுத்தென்று ஆசிரியர் தொல்காப்பியனார் கூறியதென்னையெனின்; எல்லா எழுத்தொலி கட்குங் காரணம் ஆய ஆய்தவொலிதான் தனித்து நிற்குமாயிற்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/86&oldid=1585673" இலிருந்து மீள்விக்கப்பட்டது