உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

மறைமலையம் 19

சிறிதும் பயன்படாது; மற்று அது தன் காரியங்களாய்த் திரிபெய்தும் வழியும், தன் காரியங்களைச் சார்ந்து நிற்கும் வழியுமே பொருளறிவுறுக்குஞ் சொற்களாய்ப் பயன்படுவ தாகும். 'எஃகு' ‘கஃசு’ என்னுஞ்சொற்களிற் போல இவ்வாறு தன் காரியவொலிகளில் சார்ந்து நின்றன்றி அது பொரு டராமையினாலும், தன் காரியமான ஓர் எழுத்தொலியையே தான் சார்ந்து நின்று அதனைப் பல வேறு ஒலிகளாய்ப் பலவேறு மொழிகளில் வழங்கச் செய்தலினாலும் அதனை ஆசிரியர் சார்பெழுத்தென்று கூறுவாராயினர். தமிழின்கண் உள்ள ஒற்றெழுத்து உயிரெழுத்துக்களோடு இவ்வாய்த வெழுத்தையும் குற்றியலிகரம் குற்றியலுகரங்களையும் சார்த்தி உலகத்தின்கட் பரவி வழங்கும் எந்த மொழியின் எந்த எழுத்தையும் செயற்கைப் படுத்துப் பிறப்பித்தல் எளிதாம்.* இவ்வாறு காரணவொலியும் காரணப் பொருளுந் தத்தங் காரிய வொலிகளையும் காரியப் பொருள்களையுஞ் சார்ந்து நின்றன்றிப் பயன்படாவென்பதனை ஓர் எடுத்துக் காட்டின் கண் வைத்து விளக்குவாம். நிலத்தின்கண் மண்ணோடு விரவிச் சிதர்ந்து கிடக்கும் பொற்றுகள்கள் அவ்வாறு க்குந்தனையும் பயன்படா. மற்று அவை ஒருங்கெடுத்துத் தொகுத்து உருக்கப்பட்டுப் பொற்கட்டியாயும் பொற் காசாயும் பொற்பணிகளாயும் திரிபுபடுத்தப்பட்டுழியே பயன் பெரிதுடையவாம். இது போலவே, விந்து காரணவொலி யாகிய ஆய்தமும் தன் நிலையில் நின்றக்காற் பயன்படாமை யும், தன் காரிய வொலிகளைச் சார்ந்து நின்றக்காற் பயன்பெரிதுடைத்தாதலும் பகுத்துணரற்பாற்று. இதுகாறுங் கூறியது கொண்டு தமிழ் மொழியின்கண் உள்ள முப்பது முதலெழுத்துக்களும் மூன்று சார்பெழுத்துக்களு மே குறைபாடில்லாத உறுப்புக்களுடைய மக்கள் குறைபாடில்லாத முயற்சியால் இயற்கையாகப் பிறப்பிப்பனவாகுமென்றும், னைமொழிகளில் இவற்றினும் மிகுதியாகக் காணப்படும் ஏனை எழுத்துக்களெல்லாம் இம்முதலெழுத்துச் சார் பெழுத்துக்களின் உதவியால் குறைபாடுடைய முயற்சி கொண்டு செயற்கைப்படுத்து வருந்திச் சொல்லவரும் எழுத்துக்களாம் என்றும், எல்லாவாற்றானும் நிறைவுடைய தமிழ்மொழியின் வ்வுண்மை யுணராமல் அதனைக்

து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/87&oldid=1585674" இலிருந்து மீள்விக்கப்பட்டது