உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 19.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6

அறிவுரைக்கோவை

59

மெய்

மய்

அம்மா எனும் அச்சொற் கற்றதுணையானே, தம்மிதழை மேலுஞ் சிறிது வலிந்து இயக்குமாறறிந்து தந்தையைக் காண்டொறும் பா பா என்றழைத்தலானே அப்பா எனுஞ் சொல் வெளிப்படலாயிற்று. இங்ஙனம் மெல்லென்றொலிக்கும் ஒலிநுட்பம் பற்றி மகரத்தையும் அதனோடோரினப்பட்ட எழுத்துக்களையுந் தமிழ் நூலார் மெல்லெழுத்தென் றவ்வாறோதுவாராயினார்; வல்லென்றொலிக்கும் வகைபற்றிப் பகரத்தையும் அதனோடோரினப்பட்ட எழுத்துக்களையும் வல்லெழுத்தென்று அவ்வாறோதினார். இங்ஙனஞ் சிறுமகாரான் முதன் முதன் மொழியப்படும் லியெழுத்துக்கள் மகரமும் பகரமுமாதல் பற்றியே, உலகத்தின்கட் பரந்து வேறு வழங்கப்படும் மொழிகளினெல்லாம் தாய்தந்தையரை யழைக்குஞ் சொற்கள் அம்மா அப்பா எனுமிரண்டேயாயின. யாயின. உலக வியற்கைத் திறம்பற்றி மொழியப்படும் அம்மா அப்பா வென்னுஞ் சொற்பெற்றி தேற மாட்டாத வடநூல்வல்லார் சிலர் அவையிரண்டும் மாதா பிதா வென்னும் வடமொழி களின் சிதைவாய்த் திரிந்து தமிழில் வழக்கமுறுகின்றனவென் றுரைத்து ஏதம்படுகின்றார். இது கிடக்க.

வேறு

இனி மேலே காட்டிய ட், ண் முதலிய எட்டு மெய்யெழுத்துக்களும் நா மேலண்ணத்தைத் தொடுதலானே பிறக்கும் நாவெழுத்துக்களாம். அங்ஙனம் மேலண்ணந் தொட்டு உச்சரித்தற்பொருட்டு வேண்டப்படு முயற்சி உறுப்புக்கள் வலிவேறி வேண்டியவா றியக்கப்படுங் காலத்தே வருவதொன்றாம். இதழ் நாப் பல்லணத் தொழில்கள் வருந்தி நிகழாக் குழவிப் பருவத்தே யரிது முயலமாட்டா தெளிது செல்லும் முயற்சியே தோன்றா நிற்கும். அங்ஙனம் முயற்சியெல்லாம் எளிது சொல்லா நிற்குங் குழவிப்பருவத்தே நாவினாற் பிறக்குஞ் சொற்றோற்றங் காண்டலரிதினும் அரிதாம். யாமொருநாள் மூன்று அகவை செல்லாநின்ற ஒரு பிள்ளை ஏனைச் சிறு று மகார் சிலரோ டொருங்கு விளையாடிக் கொண்டிருத்தலை உற்றுநோக்கி யிருந்தோம்; அப்போது அப்பிள்ளை ராமன் என்னும் பெயருடைய ய சிறுவனை ஆம்' 'ஆம்' என்றழையா நின்றது; அதனைக் கேட்டலும் எம்முணர் வெல்லாம் ஒருவழி யொருங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_19.pdf/92&oldid=1585679" இலிருந்து மீள்விக்கப்பட்டது