உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144

மறைமலையம் - 20

(11-13) சிலநாள் - இன்னுஞ் சிலகாலம், நண்டு முதலாகிய பொன்று உடல் கடவி - நண்டு முதலாகிய அழியும் உடம்புகளிற் செலுத்தி, நான்கு அறிவு ஓங்குறச் செய்தனை - நான்கு அறிவுகள் கிளர்ந்தெழுமாறு செய்தருளினை;

நண்டோடு இனப்பட்ட நான்கறிவு உயிர்கள் தும்பி முதலாயினவாதல், “நண்டுந் தும்பியும் நான்கறிவினவே (தொல்காப்பியம், மரபியல், 31) என்பதனான் அறிக.

ஏனைய உடம்புகளும் அழியும் பெற்றியவேனும், மாந்தரில் ஊன் உண்பார் கூட்டம் பெரும்பான்மையும் இந்நண்டு முதலான உடம்புகளைக் கொன்றழிக்கின்றதாகலிற், 'பொன்றுடம்பு' எனக் கிளந்தோதினார்.

‘கடவல்’ செலுத்தல்; இஃதிப்பொருட்டாதல் “கையொளிர் காண்க (புறப்பொருள்

வேலவன் கடவ

எனபுழிக்

வெண்பாமாலை 12, 1, கொளு).

இதன்கட் கூறப்படும் நான்காவது அறிவு கண்களாற்கண்டு அறியும் அறிவாகும். ஓங்குற, ஒருசொல்.

(13-16) ஈங்கு - இப்பால், மாவும் மாக்களும் மேவிய பின்றை - விலங்குடம்புகளும் மாக்களுடம்புகளும் பொருந்தியபின், ஐஉணர்வு எங்கும் மெய்பெறக் கொளுவி ஒழுங்குற உணர்த்தினை ஒரு சில பகல் - ஐந்து உணர்வுகள் முழுமையும் மெய்யாகவே நிலவப் பொருத்தி ஒழுங்குபெற உணர்த்தியருளினை ஒருசிலநாட்கள்.

‘ஈங்கு’, என்பது அங்ஙனமெல்லாம்

மேற்சென்ற பிறவிகளிற் பிறப்பித்து அறிவுவளரச்செய்து பிறகு இப்பால் எனப்பொருள் பயந்தது; இஃது ஐயறிவுடைய பிறவிக்கு வந்ததன் அருமையுணர நின்றது.

‘மா’ வென்பது விலங்கு; ‘மாக்க’ ளென்றது, அவ்விலங்குப் பிறப்பினும் உயர்ந்து ஏனை மக்கட்பிறப்பிற் றாழ்ந்து அவ்விரண்டின் நடுவணதாய் அவற்றிற்கு வேறானதொரு பிறப்பாம். இப்பிறவியுட்படும் 'மாக்கள்' என்னும் உயிர்கள் ) விலங்கின் உருவமும் மக்களுருவமுங் கலந்ததோருருவத்தை உடையவாயிருக்குமென்ப. இங்ஙனமொரு படைப்பு விலங்குப் பிறப்பிற்கும் மக்கட்பிறப்பிற்கும் இடையே ஆண்டவனாற்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/169&oldid=1586913" இலிருந்து மீள்விக்கப்பட்டது