உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவொற்றிமுருகர் மும்மணிக்கோவை

145

படைக்கப்பட்டிருத்தல் வேண்டுமென இக்காலத்து உயிர் நூல்வல்லாரும் உய்த்துணர்ந்து, அங்ஙனந்தாம் உணர்ந்தவாறே யிருப்பதொரு படைப்பினை ‘ஆத்திரேலியா (Australia) என்னும் நாட்டில் நேரிற்கண்டு, தமது துணிபினை மெய்ப்படுத்து வாராயினர். இற்றைக்கு ஏறக்குறைய ஐயாயிரத்து ஐந்நூறு ஆண்டுகட்கு முன்னரே நம் முதுதமிழ்ப்பேராசிரியராய் விளங்கிய தொல்காப்பியனார் இவ்வுண்மையை நன்கு தெளிந்து, அவ்வினத்தவாம் உயிர்கட்கு ஐந்து அறிவுகள் உண்டுஎன அறிவு வரையறைகாட்டி "மாவும் மாக்களும் ஐயறிவினவே." (மரபியல், 32) எனத் தமது அரும்பெறல் நூலில் நூற்பா யாத்துரைத்தது பெரிதும் நினைவுகூர்ந்து

மகிழற்பாலதாகும்.

முற்கூறப்பட்ட நான்கு உணர்வுகளுடன் செவியாற்கேட்டு உணரும் உணர்வுங்கூட இங்கு ஐயுணர்வுகளுண்டாயின. ‘எங்கு மென்றது, முழுமையுமென்னும் பொருட்டு. செவியுணர்வு பெற்றபின்னரே உயிர்கள் சேய்மைக்கணிருந்து தமக்குவரும் ஏதம் உணர்ந்து உயிர் பிழைக்கின்றனவாகலின், ஐயுணர்வுகளும் மெய்யாக நிலைபெற்று நிலவல் மாவும் மாக்களுமாகப் பிறவி யெடுத்த பின்னரேயாதல் தேற்றுதற்கு மெய்பெறக்கொளுவி என்றார்; கொளுவல், பொருத்தல், “கலை நலங்கொளுத்தி யிட்டான்” என்புழிப்போல (சீவகசிந்தாமணி, 673). பகல், நாள்; இங்குக் காலம் என்னும் பொருட்டு.

(17-21) ஆங்ஙனம் ஒழிந்த அளவு இல் காலத்து - அவ்வாறு கழிந்த அளவில்லாத காலத்தின் எல்லையில், நிறைவுறு குற்றம் முறை முறை தேய - இயற்கையே நிறைந்திருந்த துகள் அடை வடைவே குறையே, பகுத்து உணர் காட்சி மிகுத்துத்தோன்ற அவ்வாற்றாற் பகுத்துஉணரும் அறிவு மிகுந்து விளங்க, மக்கள் யாக்கையில் தக்கவா நிறுவி - மக்களுடம்பில் தகுதியாக நிறுத்தி, பல பிறப்பு உறீஇய நாள்களும் பல - பல பிறப்புகளில் அடியேனை உறுவித்த காலங்களும் பலவாம்.

குற்றம் - மல அழுக்கு. முறைமுறை - அடைவடைவே, (புறநானூறு, 29).

‘பகுத்துணர் காட்சி’யாவது, எவற்றையும் நல்லது இது, தீயது இது எனப் பிரித்து உணரும் ஆறாவது அறிவாகும். ‘காட்சி’,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/170&oldid=1586914" இலிருந்து மீள்விக்கப்பட்டது