உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 20.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146

மறைமலையம் - 20

அறிவென்னும் பொருட்டாதல் “மருடீர்ந்த மாசறு காட்சியவர்”. (திருக்குறள், 199) என்பதனால் அறியப்படும்.

'உறீஇய’:பிறவினைப் பெயரெச்சம்; (பதிற்றுப்பத்து 44).

எனவே முதலடிமுதல் இவ்விருபத்தோராம் அடிகாறும் இயற்கையே வினையிற்கிடந்த உயிர்கள் ஆண்டவன்

றிருவருளாற் புன்முதலான பல பிறவிகளிற் பிறந்து பிறந்து ஓரறிவுமுதலாக ஆறறிவுகள் விளங்கபெறுமாற்றை ஆசிரியர் தம்மேல் வைத்துரைத்தமை காண்க. வினையிலே கிடந்த உயிர்கள் இவ்வாறெல்லாம் பற்பல காலமாகப் பல்வகைப் பிறவியுட்பட்டு உழலுமாற்றால் முறைமுறையே அறிவுபெறுவதான உண்மை பண்டைத்தமிழ்ப் பேராசிரியரான தொல்காப்பியனார் மே லெடுத்துக்காட்டிய

L

ஓதிய

மரபியற் சூத்திரங்களில் வாற்றானும், சமயப் பேராசிரியரான மாணிக்கவாசகப் பெருமான்,

“புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக் கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்

செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள்

எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தே னெம்பெருமான் மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்"

(திருவாசகம், சிவபுராணம்)

என அருளிச்செய்தவாற்றானும் நன்கறியப்படும்.

(22-32) அவ்வாறு ஒழிந்தனபோகச் செவ்விய இந்நாள் எனக்கு நல் நெறி காட்ட - அங்ஙனம் முடிந்தகாலங்கள் கழிய இஞ்ஞான்று எளியேற்கு நல்வழி காட்டும்பொருட்டு, செவ்வந்திப்போந்த திருச்சிராப்பள்ளியில் தோன்றியருளிய, பொய்யாநாவின் செந்தமிழ் வரம்பு முந்துகண்டுணர்ந்து பொய்த்தல் அறியாத நாவினாற் செந்தமிழெல்லையை முற்படத் தான் ஓதி உணர்ந்து, மெய்ப்பொருள் அறிவும் சொற்பொருள் வன்மையும் பொறையும் செறிவும் நிறையக்கொண்டு மெய்ப்பொருள் உணர்வும் சொற்பொருள் ஆராய்ச்சியும்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_20.pdf/171&oldid=1586915" இலிருந்து மீள்விக்கப்பட்டது